உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை இரத்தம் உறிஞ்சி உடலின் பல்வேறு பகுதிகளுக்கு வழங்குகிறது. அதனால் இரத்த சுத்திகரிப்பு என்பது இன்றியமையாதது. உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் இரத்தத்தில் கழிவுகள் இல்லாமல் இருப்பது அவசியம்.
இரத்த ஓட்டம் மேம்படுத்தும்
ஆயுர்வேத முறையில் இரத்த சுத்திகரிப்புக்கு உதவும் மூலிகைகள், இரத்த ஓட்டத்தில் இருந்து பிரிந்து நச்சுபொருள்களை வெளியேற்றுவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. நெல்லிக்காய் மிக மிக சிறந்த கனி. இது இரத்த சுத்திகரிப்பாளராக செயல்படுகிறது. தீங்கு விளைவுக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. தரத்தை,இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.
நெல்லி
நெல்லிக்காய்களை நுகர்வு உட்கொள்ளல் ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நெல்லிக்காய் ஜூஸ் உதவுகிறது.
இது நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்துகிறது. உடல் உள்ளுறுப்புகளை பலப்படுத்துகிறது. மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
எப்படி எடுப்பது
நெல்லிக்காயை உணவே மருந்தாக்கி எடுக்கலாம். நெல்லிக்காய் சட்னி, நெல்லிப்பொடி சாதம், நெல்லி தேன். நெல்லி மொரப்பா, நெல்லி அல்வா, நெல்லி ஜூஸ் என உணவில் சேர்த்து சாப்பிடலாம்.
அறிவுறுத்தல்
மேற்கண்ட மூலிகைகள் இரத்தத்தில் இருக்கும் நச்சை நீக்க கூடிய ஆயுர்வேத மூலிகைகள் என்றாலும் இதை உணவில் சேர்த்து எடுக்கும் போது ஆரோக்கியமானவை. இது எந்த பாதிப்பையும் உண்டு செய்யாது. ஆனால் இரத்த சுத்திகரிப்புக்கு மூலிகை என்பதை மருந்தாக எடுக்கும் போது மருத்துவ நிபுணரின் அறிவுரையோடு எடுக்க வேண்டும்.
தகவல்
G.K.தாரா ஜெயஸ்ரீ MD (Ayu)
ஆயுர்வேத மருத்துவ நிபுணர்
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000!- விபரம் உள்ளே
அகவிலைப்படி 42% மாக உயருகிறது- மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்?