Health & Lifestyle

Friday, 26 August 2022 11:13 PM , by: Elavarse Sivakumar

நமது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் முக்கியப் பணியாற்றுகிறது கல்லீரல்.அதனால்தான், கல்லீரல் நமது உடலின் இன்றியமையாத பகுதியாகக் கருதப்படுகிறது. இது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. அது மோசமாகிவிட்டால், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்தக் கல்லீரலைப் பாதுகாக்கும் வகையில், அதன் செயல்பாட்டை எளிமையாதாக மாற்ற உதவும் உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

அந்த வகையில், கல்லீரலைப் பொறுத்த வரையில், நெல்லிக்காய் வரப்பிரசாதம் எனலாம். ஏனெனில் கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதால் நன்மை பயக்கும். இதன் மூலம் உடலில் உள்ள ஹைப்பர்லிபிடெமியா மற்றும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் போன்றவையும் குறைக்கப்படுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி

அம்லாவில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. எனவே இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் போது பல வகையான நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. செரிமான அமைப்பு பலவீனமாக உள்ளவர்களுக்கு ஆம்லா என்னும் நெல்லிகாய் ஒரு சஞ்சீவினியைப் போன்றது.

நெல்லி ஜூஸ்

நெல்லிக்காயை ஜூஸ் வடிவில் எடுத்துக் கொள்வதும் நன்மை பயக்கும். அதனை நன்கு கழுவி கொட்டையை நீக்கி விட்டு பொடியாக வெட்டி வைத்து கொள்ளவும். மிக்ஸியில் நெல்லிக்காயை போட்டு, கூடவே இஞ்சி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த ஜூஸை வடிகட்டி அதில், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வரவும். அந்த ஜூஸை மோர் கலந்தும் அருந்தலாம்.

கருப்பு உப்பு

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை கருப்பு உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க...

குடும்பத் தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் - அரசு அறிவிப்பு!

தன் உயிரைக் கொடுத்துத் தாயைக் காப்பாற்றிய மகன்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)