கொய்யாவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன, அவை உங்களை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க நிச்சயம் உதவும்.
கொய்யாப்பழம் எடை இழப்புக்கு உகந்த பழமாகக் கருதப்படுகிறது ஏனெனில், இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. அவை உடலில் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதுடன், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்துகிறது. அதேநேரத்தில், கொய்யா ஜூஸ் ஒரு மாய பானமாகும்.
5 ஆரோக்கிய நன்மைகள்:
மலச்சிக்கலைத் தடுக்கிறது
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொய்யா சாற்றை உட்கொள்வது மலச்சிக்கலைப் போக்கவும் தடுக்கவும் உதவும். இதிலிருக்கும் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் வழக்கமான குடல் இயக்கத்தைத் தூண்டுகிறது. மேலும் மலச்சிக்கலின் போது ஒரு நபர் உணரும் வீக்கம், வயிற்று வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது.
கண் பார்வைக்கு
கண்களை ஆரோக்கியமாகவும், மாகுலர் சிதைவு, கண்புரை போன்ற கண் தொடர்பான நோய்களிலிருந்து விடுபடவும் வைட்டமின் ஏ அவசியம். கொய்யா சாற்றில் இது அதிக அளவில் உள்ளது. இது கண் செல்களைப் பாதுகாக்கிறது மற்றும் கண்பார்வை பலவீனமடைவதைத் தடுக்கிறது.
சருமப் பாதுகாப்பு
சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பதில் வைட்டமின் சி மிக முக்கிய பங்கு வகிக்கிறது, கொய்யா சாற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. கொய்யாவில் இருக்கும் அதிக அளவு தண்ணீர் சருமத்தின் நீரேற்றத்தை அதிகரித்து, முகப்பருவிலிருந்து விலக்கி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எடையைக் குறைக்க
கொய்யா சாறு, அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து காரணமாக உடல் எடையை பராமரிக்கவும் குறைக்கவும் உதவுகிறது, ஏனெனில் இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும், எனவே அதிகப்படியான பசி உணர்வை தடுக்கிறது. இதில் சர்க்கரை மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன, இது காலையில் முதலில் சாப்பிடுவதற்கு சரியான பானமாக அமைகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
கொய்யாவில் நிறைந்துள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதுடன், உடலை நோய்களிலிருந்து விலக்கி வைக்கும். இது ஆன்டிபாடிகளின் உருவாக்கத்தை அதிகரிக்கிறது. வைரஸ் காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தை கூட தடுக்கிறது.
மேலும் படிக்க...