Health & Lifestyle

Saturday, 16 April 2022 09:59 PM , by: Elavarse Sivakumar

அசைவ உணவு சாப்பிட்டு, உடல் எடையைக் குறைக்க ஆசைப்படுகிறீர்களா? அதுவும் மிகக்குறைந்த செலவில் இருக்கவேண்டும் என எண்ணுகிறீர்களா? அப்படியானால், இந்தத் தகவல் உங்களுக்குத்தான்.

அசைவ உணவுகளில் தவறாமல் இடம்பிடிக்கும் முட்டை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இருப்பினும் அசைவம் என்பதால், உடல் எடைக் கூடும் என்பதற்காகவே மருத்துவ ரீதியில் அதிகளவில் பரிந்துரைக்கப்படுகிறது முட்டை. ஆனால் அந்தக் கோழி முட்டைச் சாப்பிட்டு உடல் எடையை குறைக்க முடியுமா? என்ற சந்தேகம் தோன்றலாம். உண்மை அதுதான்.

தவறான உணவுப்பழக்க வழக்கம்

மோசமான வாழ்க்கை முறையால் பலருக்கும் ஆரோக்கியத்திற்கு பங்கம் வருகிறது. குறிப்பாக, எடை அதிகரிப்பு, இதயநோய் பிரச்சனை மற்றும் செரிமான கோளாறுகள் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். நாளடைவில் பெரிய உடல் சார்ந்த நோய்களுக்கும் இவையே காரணமாக அமைகின்றன. உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் மக்கள் சிலர் தவறான வழிமுறைகள் மற்றும் மருந்துவரின் ஆலோசனையைப் பெறாமல் கடைபிடிக்கும் டையட் இன்னும் கூடுதலான சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது.

இதனால் சரியான டையட் (Diet)முறையை கடைபிடித்து உடல் எடையை குறைப்பது அவசியம். அந்தவகையில் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் முட்டையை பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்கலாம். புரதங்கள் அதிகமாக இருக்கும் முட்டையுடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிடும்போது உங்களின் எடை குறைப்புக்கான முயற்சியில் நல்ல பலன் கிட்டும்.

முட்டை + ஓட்ஸ்

முட்டையுடன் ஓட்ஸ் கலந்து சாப்பிட்டால் தொப்பையை எளிதில் குறைக்கலாம். ஓட்ஸில் உள்ள மாவுச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. முட்டையுடன் ஓட்ஸ் சாப்பிடுவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

முட்டை + தேங்காய் எண்ணெய்

வெண்ணெய் அல்லது மற்ற வகை எண்ணெயில் செய்யப்பட்ட ஆம்லெட்களை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு அதிக கலோரிகளை வழங்குகிறது. தேங்காய் எண்ணெய் வளர்சிதை மாற்றத்தை 5% அதிகரித்து எடையை குறைக்க உதவுகிறது. 30 பேரிடம் நடத்திய ஆய்வில், தினமும் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஒரு மாதத்திற்கு உட்கொள்வதால், அவர்களின் இடுப்பின் அளவு 1.1 அங்குலம் குறைந்துள்ளது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், அடுத்த முறை எண்ணெய் அல்லது வெண்ணெய்க்குப் பதிலாக தேங்காய் எண்ணெயில் ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள்.

முட்டை + கீரை

முட்டையுடன் கீரை சாப்பிடுவது விரைவான எடை இழப்புக்கு ஒரு சிறந்த உணவு முறை. ஒரு கப் கீரையில் ஏழு கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவற்றை உணவாக உட்கொள்ளும்போது உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் புரதங்கள் எளிதாக கிடைத்துவிடும். அதேநேரத்தில் குறைவான உணவையும் நீங்கள் எடுத்துக் கொண்டிருப்பீர்கள். இந்த உணவு உங்களின் பசியை நீண்ட நேரம் கட்டுக்குள் வைத்திருக்கும்.

ஊட்டச்சத்து

உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை முட்டை எளிதில் ஈடுசெய்யும். ஒரு முட்டையில் 75 கலோரிகள் உள்ளன. இதில் 7 கிராம் உயர்தர புரதம் உள்ளது. கூடுதலாக, ஒரு முட்டை சாப்பிடுவதால் 5 கிராம் கொழுப்பு, 1.6 கிராம் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் உடலுக்கு கிடைக்கும். இந்த காரணத்திற்காக உடல் எடை குறைப்புக்கான சிறந்த டையட்டில் முட்டை முதல் இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க...

பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?

பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)