தற்போதைய காலகட்டத்தில், பலர் தங்களின் உடல் ஆரோக்கியத்தை பற்றி கவனமாக உள்ளனர். இதற்காக பலர் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், பலர் பாலை தவிர்க்க வேண்டும் என்று நினைப்பது உண்டு. ஆனால் பல ஆண்டுகளாக டீ குடித்து பழகியதால், டீ குடிக்காமல் இருக்கவே முடியாது. ஆனால், இனி டீ குடிக்க பசும்பால் தேவை இல்லை. ஆம், தேங்காய் பால் மற்றும் தேநீர் போன்ற இந்த இரண்டு பொருட்களையும் இணைக்கும் போது, நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு சூப்பர் பானம் கிடைக்கும்.
பொதுவாக தேங்காய் வளரும் வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் மக்களால் இந்த பானம் தயாரிக்க முடியும். தேங்காய்ப் பாலில் நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்துள்ளன. மேலும், இதில் அதிக அளவு லாரிக் அமிலம், மெக்னீசியம், இரும்புச் சத்து, வைட்டமின் c, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் காணப்படுகிறன. ஆயுர்வேத மருத்துவ முறையில் தேங்காய் பால் மிகவும் சத்தானதாக கருதப்படுகிறது. தேங்காய் பாலில் ஹைப்பர்லிபிடெமிக் சமநிலைப் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் காணப்படுகின்றன.
இதன் காரணமாக இது சருமத்திற்கு மிகுந்த நன்மைகளை வழங்குகிறது. தேங்காயை உணவில் சேர்த்துக் கொள்வது சருமத்தை மேம்படுத்துகிறது. இப்படிப்பட்ட தேங்காய் பாலில் டீ அருந்துவது உங்கள் சருமத்தை அற்புதமாக வைத்திருக்க உதவும். தேங்காய் நீரைப் போலவே, தேங்காய் பால் டீயும் உடல் எடையைக் குறைக்க நன்மை பயக்கும். எடையை அதிகரிக்கச் செய்யும் கொழுப்புகளை அழிக்கும் பண்புகள் தேங்காயில் உள்ளன.
அதோடு, தேங்காயில் குறைந்த கலோரிகளும், அதிக நீர் உள்ளடக்கம் நிறைந்து உள்ளது. இதனால், இது உடல் எடையைக் குறைக்க உதவும் என்று கருதப்படுகிறது. கொரோனா வைரஸைத் தவிர்க்க தேங்காய் தண்ணீரை குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றன. இதுகுறித்த ஆராய்ச்சியில், நீங்கள் தேங்காய் பால் டீயை அருந்தினாலும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று உறுதிசெய்ய பட்டுள்ளது.
தேங்காயில் காணப்படும் வைட்டமின் c நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். தேங்காயில் உள்ள எச்டிஎல் கொலஸ்ட்ரால், லாரிக் அமிலம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும் என்று ஆய்வு முடிவுகள் நிரூபிக்கின்றன.
மேலும் படிக்க:
ப்ளாக் டீ-யின் ஆரோக்கிய நன்மைகள்! அறிந்து கொள்ளுங்கள்
மஞ்சள் நிறத்தில் விற்கப்படும் பிரெஷான பேரீட்சைப்பழத்தில் கிடைக்கும் நன்மைகள்!