பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஒரு சிறந்த உணவாக இருக்கிறது பூண்டு. தினமும் 2 பூண்டுப் பற்களை பச்சையாக தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகள் நீங்கும். பூண்டை பச்சையாகவோ அல்லது உணவிலோ சேர்த்து கொள்வதை தவிர வறுத்து சாப்பிடுவதாலும் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
வறுத்த பூண்டின் நன்மைகள் (benefits of fried garlic)
- வறுத்த பூண்டை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காது. எனவே வறுத்த பூண்டை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் பல இதய நோய்களை உருவாக்கும் வாய்ப்புகள் குறைக்கப்படலாம்.
- வறுத்த பூண்டு தமனிகளை சுத்தமாக வைத்திருப்பதால் அவற்றில் ரத்தம் உறைவதை தடுக்க உதவுகிறது.
- வறுத்த பூண்டு தமனிகளை சுத்தமாக வைத்திருப்பதால் அவற்றில் ரத்தம் உறைவதை தடுக்க உதவுகிறது.
- வறுத்த பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூண்டில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி உள்ளது, இவை இரண்டும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. எனவே வறுத்த பூண்டு வைரஸ் மற்றும் பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
- நீங்கள் சோர்வாக உணரும் போது மற்றும் உங்கள் எனர்ஜி அளவு குறைவாக இருப்பதை போல இருக்கும் போது, வறுத்த பூண்டை சாப்பிடுவதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் வறுத்த பூண்டை சாப்பிடுவது அதிக பலன் தரும்.
- வறுத்த பூண்டு சாப்பிடுவது டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை அதிகரிக்கிறது. இதன் மூலம் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வறுத்த பூண்டு உதவுகிறது.
மேலும் படிக்க
பார்லி அரிசியின் மகத்தான மருத்துவ குணங்களை அறிவோம்!
இதைத் தெரிந்து கொண்டால் காய்கறித் தோல்களை இனி வீசியெறிய மாட்டீர்கள்!