மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 January, 2021 10:24 AM IST
Credit : Hindu Tamil

பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் B, விட்டமின் A, மினரல்ஸ், தாது உப்புக்கள், கால்சியம் (Calcium), இரும்புச் சத்து, பாஸ்பரஸ், லினோனெலிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

நமது உடம்பிற்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் அதிகமாக பூசணிக்காயில் (Pumpkin) இருப்பதால், நாம் இதை வாரம் இரண்டு முறைகள் அல்லது தினமும் உணவில் சேர்த்து வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

  • பூசணிக்காயின் விதைகளில் ஸ்டெரைல் கிளைகோஸைட் மற்றும் கொழுப்பு அமிலம் இருப்பதால், இவை நமது உடம்பில் புற்று நோய் கட்டிகளை (Cancer Cells) ஏற்படுத்தும் செல்களை அழித்து புற்று நோய் வராமல் பாதுகாக்கிறது.
  • பூசணி சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நெல்லி சாறு அல்லது எலுமிச்சை சாறு கலந்து தினமும் குடிப்பதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நம்மை தாக்குவதை தடுக்கிறது.
  • பூசணிக்காய்யை தினமும் நம் உணவில் சேர்த்து வந்தால், வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை அழித்து, மூலப் பிரச்சனைகளுக்கு பூசணிக்காய் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
  • ஆயுர் வேதம் மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் வெண் பூசணிக்காயின் பூவை மஞ்சள் காமாலை, சீதபேதி மற்றும் இருமலைப் (Cough) போக்கும் சிறந்த மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
  • பூசணிக்காய் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகள் பலவீனமாவதை தடுக்கிறது. மேலும் இதில் இருக்கும் நார்ச் சத்துக்கள் சீரண உறுப்புகளுக்கு பலத்தை அதிகப்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
  • வெண்பூசணிக் காயின் முற்றிய காய்கள் தலைவலி, நெஞ்சு சளி, மூச்சிரைப்பு ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக இருப்பதோடு, சிறுநீரக தொடர்பான நோய்களையும் தடுக்கிறது.
  • வெண்பூசணிக் கொடியின் தண்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் (Vitamin) சத்துக்கள் நமது உடம்பில், புதிய செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
  • பூசணியில் பொட்டாசியம் சத்து மிகுதியாக இருப்பதால், நமது உடம்பின் அதிக ரத்த அழுத்தத்தை தடுத்து, இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமல் பாதுகாக்கிறது.

மேலும் படிக்க

சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்காக நச்சுன்னு 4 டிப்ஸ!

மூளையை பாதிக்கும் சர்க்கரை! ஆய்வில் தகவல்!

English Summary: Health benefits of Pumpkin
Published on: 22 January 2019, 05:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now