Health & Lifestyle

Monday, 29 June 2020 05:07 PM , by: Daisy Rose Mary

Image credit by : Diet doctor

வெல்லம், வெள்ளைச் சர்க்கரை இவை இரண்டுமே கரும்பில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. இதில், வெல்லத்தை நாம் எவ்வளவு எடுத்துக்கொண்டாலும், நம் உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது. அதேநேரத்தில், வெள்ளையாக வர வேண்டும் என்பதற்காக அதிகளவில் ரசாயனம் சேர்த்துத் தயாரிக்கப்படும் வெள்ளை சர்க்கரை, உடலுக்குப் பலவிதத்தில் தீங்கை விளைவிக்கிறது.

உண்மையில், நம்முடைய உடல் எடை அதிகரிக்க அதிலும், தொப்பை உருவாவதற்கு இந்த சர்க்கரையே முக்கியக் காரணியாகத் திகழ்கிறது. அதிலும், மது அருந்துபவராக இருப்பின், தேனீர், காஃபி, இனிப்பு வகைகள் போன்றவற்றின் மூலம் அதிகளவில் வெள்ளைச் சர்க்கரையை எடுத்துக்கொள்வதுடன், போதிய உடற்பயிற்சியைச் செய்யாமல் இருந்தால்,ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, நீரழிவு நோய் (Diabetics) ஏற்படுகிறது. எனவே நாம் உண்ணும் உணவில் வெள்ளைச் சர்க்கரையை படிப்படியாகத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

பாதிப்புகள்

எனவே நாம் முடிந்த வரை நம் ஆன்றாம் உட்கொள்ளும் உணவு வகைகளில் இருந்து இத்தகைய அபத்தான வெள்ளை சர்க்கரையை தவிற்பது மிகவும் அவசியமாகிறது. ஆனால் இதனை உடனே நிறுத்தினால் தலைவலி, எரிச்சல், மூச்சுத்திணறல், அஜீரணம் தொடர்பான கோளாறுகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இவற்றில் இருந்து விடுபட, அதிக சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதும் மிக மிக அவசியம். ஆக உடல் பருமன் பிரச்சனை உள்ளவராக இருப்பின் அதனைக் குறைக்க முன்வரவேண்டும். அதற்குச் சரியான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு (Diet) அவசியமாகிறது. ஏனெனில் நாம் உண்ணும் உணவுதான் நம்முடைய ஆரோக்கியத்திற்கும், கட்டுக்கோப்பான உடலமைப்புக்கும் அடித்தளம் அமைக்கிறது.

Image credit by: Expoters india

சர்க்கரைக்கு குட்-பை சொல்ல சில டிப்ஸ்கள்

காலை உணவு (Break Fast)

காலை உணவு என்பது எப்போதுமே, அதிக நார்ச்சத்து (Fibre) ஊட்டச்சத்து (Nutrients) மிகுந்த ஹெவி (Heavy) உணவாக இருக்க வயிறு நிறைய சாப்பிடலாம்

மதிய உணவு(Lunch)

அதிகளவில் புரதச்சத்து (Protein) நிறைந்த உணவாக இருக்க வேண்டும். நன்றாகப் பசித்தபின்பு சாப்பிட வேண்டும்.

இரவு உணவு (Dinner)

ஆவியில் வேகவைத்த மிதமான உணவாக இருக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

அதிக கார்போஹைட்ரேட் (Carbohydrates) உள்ள பிரட், உருளைக்கிழங்கு, வெள்ளை அரிசி உணவு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

உண்ண வேண்டியவை

உங்கள் வீட்டில் உள்ள ஃபிரிட்ஜில் (Fridge) பச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு நிரப்பி, அவற்றை அதிகளவில் உண்ணப் பழகிக்கொள்ள வேண்டும்.

தண்ணீர், தண்ணீர் (Extra Water)

சோடா, குளிர்பானங்கள் போன்ற சர்க்கரை நிறைந்த பானங்களை முற்றிலும் தவிர்த்து விட்டு, அவற்றுக்குப் பதிலாகஅதிகளவில் தண்ணீர் பருகுங்கள். காலையில், வெறும்வயிற்றில், ஒரு லிட்டர் தண்ணீரைப் பருகுவது வயிற்றில் உள்ள கழிவுகளை அகற்றிவிடும். மேலும் ரத்தத்தில் உள்ள கெட்ட கழிவுகள் வெளியேறவும் உதவும். சராசரியாக நாள் ஒன்றுக்கு நாம் 3 லிட்டர் தண்ணீர் பருகுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Image credit by: The loop

நடனம் (Dance)

உடற்பயிற்சி செய்வது கடினம் எனக் கருதுபவராக இருப்பின் இசைக்கு ஏற்ப நடனமாடுவதைக் கடைப்பிடியுங்கள்.இதமான இசைக்கு ஏற்ப கை,கால்களை அசைத்து உடற்பயிற்சி செய்யும் ஏரோபிக்ஸ்ஸை (Arobics) வீட்டில் இருந்தபடி செய்யலாம். நெய் மற்றும் இனிப்பு வகைகளை உட்கொண்டாலும், இந்த உடற்பயிற்சி உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

பழங்கள் தேர்வு

சத்துக்கள் நிறைந்த பழங்கள், பாதாம், முந்திரி போன்ற பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்

டிடாக்ஸிபிகேடேசன் வழிகள் (Detoxification Technique)

காஃபி, தேனீருக்கு பதிலாக க்ரீன் டீயைப் (Green Tea) பயன்படுத்தலாம். காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்துப் பருகலாம். ஸ்காட்ச்(Scotch), ஓட்காவிற்கு (Vodka) பதில் ரெட் ஒயின் (Red Wine) சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம்.

இவற்றின் மூலம் உடலில் சேரும் சிறிய அளவிலான சர்க்கரையை, தினமும் 10 நிமிட நடைப்பயிற்சி, யோகா, உடற்பயிற்சி மூலம் அகற்றிக்கொள்ளலாம். இதைத்தவிர உடலுக்குத் தீங்கு விளைவிப்பதை உணவில் எந்த வகையிலும் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்ற கவனத்தோடு உணவை உட்கொள்வது நாம் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்யும்.

Elavarase Sivakumar
Krishi Jagran

Read more :

ஆரோக்கியம் முதல் அழகு வரை அனைத்தையும் அள்ளித் தரும் வாடாமல்லி!

இத்தனை பயன்கள் ஸ்கிப்பிங்கிலா? இது தெரியாமல் போச்சே!

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)