1. வாழ்வும் நலமும்

இத்தனை பயன்கள் ஸ்கிப்பிங்கிலா? இது தெரியாமல் போச்சே!

KJ Staff
KJ Staff

அன்மைகாலமாக நம்மை அதிகம் அச்சுறுத்துவது ஒபிசிட்டி (obesity) என்னும் உடல் பருமன்தான். ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் , குழந்தைகள் என்று அனைத்து தரப்பினரும் இந்த உடல் பருமன் பிரச்னையில் சிக்கித்தவிப்பதை கண்கூடாக காண முடிகிறது.

பாஸ்ட் ஃபுட் (Fast Food), இன்ஸ்டன்ட் ஃபுட் (Instant Food) ,அடிக்கடி ஹோட்டல் உணவு என்று நமது உணவு முறையை முற்றிலும் மாற்றிக்கொண்டதே இதற்கு காரணம்.
இவற்றைத் தவிர்த்தாலும், ஜிம்மிற்கு (Gym) சென்று உடற்பயிற்சி செய்ய முடியாமல், கொரோனோ ஊரடங்கு நம்மை முடக்கி வைத்துள்ளது.

வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வேலை செய்யவதால், உடல் பருமன் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஆக வீட்டிலிருப்பதால், உடல் பருமன் பிரச்னைக்கு ஆளாகியுள்ளவர்களா நீங்கள்? அப்படியானால், இந்த டிப்ஸ் உங்களுக்குதான்.

ஸ்கிப்பிங் (Skipping)

நாம் சிறுவயதில் ஸ்கிப்பிங் விளையாடியது நினைவில் உள்ளதா? அந்த ஸ்கிப்பிங்தான் தற்போதைய மிகச்சிறந்த உடற்பயிற்சி. அன்றாடம் ஸ்கிப்பிங் செய்தால், நம் உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உண்மையில், மிகச்சிறந்த பிட்னஸ் எக்யூப்மென்ட் ( Fitness Equipment) என்றால் அது ஸ்கிப்பிங் கயிறுதான். இதை வைத்து பயிற்சி மேற்கொள்வதும் எளிது. அதிக இடத்தையும் அடைக்காது. எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.

இதயத்தை வலிமையாக்கும்  (Strengthens the heart)

பயிற்சி கார்டியோ எக்சசைஸ் (Cardio Exercise) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது இதயத்துடிப்பை அதிகரித்து, இதயத்திறகு வலிமை சேர்க்கிறது.

உடல் எடை குறைய ( Lose weight)


தொடர்ந்து செய்வது, உடல் எடையை அதிகரிக்கவிடாமல் தடுத்து, உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பை படிப்படியாகக் குறைக்கிறது. இதன் மூலம் அதிக உடல் எடையினால் ஏற்படும் புற்றுநோய், நீரழிவுநோய் உள்ளிட்டவை நம்மைத் தாக்காமல் பாதுகாக்கும் அறனாக ஸ்கிப்பிங் பயிற்சி உதவுகிறது.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்!

கலோரிகளை எரிக்கிறது (Calories Burn)

ஒரு நிமிடம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால், உடலில் உள்ள15 முதல் 20 கலோரிகள் (Calories) எரிக்கப்படுகின்றன. அதாவது 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதன் மூலம் நம்மால் 200 முதல் 300 கலோரிகளை எரிக்க முடியும்.

நடைபயிற்சியை விட சிறந்தது (Better than walking)

நடைபயிற்சியோடு ஒப்பிடும்போது, நிமிடத்திற்கு 5 கலோரிகள்தான் எரிக்கப்படுகின்றன. ஸ்கிப்பிங்கைப் பொருத்தவரை, நடைபயிற்சியை விட 3 முதல் 4 மடங்கு அதாவது, 15 முதல் 20 கலோரிகள் மரணமடைகின்றன.

ஸ்கிப்பிங் செய்ய சில டிப்ஸ் (Tips)

  • கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிதுநேரம் வீட்டில், ஸ்கிப்பிங் மற்றும் யோகா செய்வதை தினமும் வழக்கமாக்கிக்கொள்வது நல்லது .

  • வீட்டின் மாடி, பால்கனி, அல்லது வீட்டுத் தோட்டம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

  • நல்ல தரமான ஸ்கிப்பிங் கயிறை வாங்குங்கள். நம் உயரத்திற்கு ஏற்றவாறு அதனை சரிசெய்யும் வசதி உள்ளதா என்பதை உறுதி செய்யத் தவறாதீர்கள்.

  • ஸ்கிப்பிங் கயிறு பிளாஸ்டிக்கால் இருந்தால், அதனைத் தவிர்ப்பது நல்லது. சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையிலான ஸ்கிப்பிங் கயிறுகள் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்துவது, செலவைக் குறைப்பதுடன் உடலுக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்காது.

  • ஸ்கிப்பிங் கயிறை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு சரி செய்துகொண்டு, பயிற்சி செய்யத் துவங்குங்கள்.

  • தினமும் 15 நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் வரை செய்தாலே போதுமானது.

வீட்டில் இருந்தபடி வேறு உடற்பயிற்சிகள் செய்ய விரும்பாதவர்கள் ஸ்கிப்பிங்கை தொடர்ந்து செய்துவரவது நல்ல பலனைத் தரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் ஸ்கிப்பிங் பயிற்சியை இனி நாமும்
மேற்கொள்வோம்.

Elavarase Sivakumar
Krishi Jagran 

பால் போல் வெண்மையான முகம் பெற இதை செய்தால் போதும்!

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் சுய தொழில்கள்


English Summary: Make your lockdown useful with powerful Skipping Exercise Published on: 24 June 2020, 04:20 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.