கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்டவை சிறுநீரக ஆரோக்கியத்துக்கு நலக்குறைவை ஏற்படுத்துகின்றன. அதோடு மட்டுமில்லாமல் புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகளின் உட்கொள்ளல் உள்ளிட்டவை காரணமாகவும் சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன.
மேலும் படிக்க: ஆடு வளர்த்தால் அம்பானி ஆகலாம்! இன்றே தொடங்குங்க!!
சிறுநீரகங்கள் உடலில் இருந்து கழிவுகளை நீக்கவும், ஹார்மோன்களை உற்பத்தி ஆகவும், ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. மேலும், உடலுக்கு உதவும் பிற முக்கியமான செயல்பாடுகளைச் செய்வதற்கும் உதவுகின்றது. சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படவில்லை எனில், உடலில் கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவம் உருவாகி ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க: உச்சம் தொட்ட பூக்கள் விலை! அலைமோதும் மக்கள் கூட்டம்!!
கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இதுதவிர புகைப்பிடிப்பது, மது குடிப்பது உள்ளிட்ட பிரச்னை காரணங்களாலும் சிறுநீரகங்களின் ஆரோக்கியம் கெடுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவைப் பராமரிப்பது சிறுநீரக நோயின் அபாயத்தைக் குறைக்கின்றது. சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது உடலுக்கு நன்மை பயக்கும்.
மேலும் படிக்க: Mutton Biryani: சுடச்சுட சுவையான மட்டன் கோலி பிரியாணி செய்முறை!
ப்ளூபெர்ரி
ப்ளூபெர்ரி என்பது தமிழில் இதை அவுரிநெல்லி என்று கூறப்படுகிறது. இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் "சூப்பர்ஃப்ரூட்" எனக் கருதப்படுகின்றது. இது ரத்த சர்க்கரையினைக் கட்டுப்படுத்த உதவும். அதோடு, சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் இதனை உண்ணலாம் எனக் கூறப்படுகிறது.
முட்டைகோஸ்
முட்டைக்கோஸில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இது டைப் 2 நீரிழிவுப் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பினைக் குறைக்கிறது. முட்டைகோஸில் பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவினை உட்கொள்வது குடல் இயக்கத்தை சீராக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும், ஆரோக்கியமான எடையினைப் பராமரிக்கவும் உதவுகிறது.
முட்டையின் வெள்ளைக் கரு
தசையினைக் கட்டியெழுப்புதல், திசுக்களை சரிசெய்தல் மற்றும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுதல் முதலான பல உடல் செயல்பாடுகளுக்கு புரதம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மிளகு
கருப்பு மிளகில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி அதிகரித்து காணப்படுகின்றது. இதை ஒவ்வொரு நாளும் அன்றாட உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரக நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தலாம். வைட்டமின்கள் சி மற்றும் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் உட்பட கருப்பு மிளகாயில் இருக்கிற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்பட உதவுகின்றன.
மேலும் படிக்க