Health & Lifestyle

Thursday, 30 July 2020 02:24 PM , by: Daisy Rose Mary

எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC Housing finance Ltd.,) புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதத்தை 6.90 சதவீதமாகக் குறைத்துள்ளது.

கொரோனா கால நெருக்கடியைக் கருத்தில் கொண்டு நடுத்தர மக்கள் மத்தியில் வீடு வாங்கும் தேவையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் பல்வேறு வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைப் பெருமளவு குறைத்து வருகின்றனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான மாதத் தவணையும் குறைக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம் குறைப்பு

அந்த வகையில் இந்திய ஆயுள் காப்பீடு கழகத்தின் துணை நிறுவனமான எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த வட்டி (Low interest rate) சலுகையை வழங்கியுள்ளது. அதன் படி புதிதாகக் கடன் பெரும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் மீதான வட்டி விதிதத்தை 6.90% ஆகக் குறைத்துள்ளது.

சிபில் ஸ்கோர் (Cibil Score) 700-க்கும் அதிகமாக இருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ .50 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் கடன் பெரும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விதிகம் 7 சதவீதம் வழங்கப்படுகிறது.

எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் இதுவரை இல்லாத வகையில் வீட்டு கடன் மீதான வட்டி விகிதத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் எல்.ஐ.சி வீட்டு கடனுக்கான வட்டியை 7.5 சதவீதமாகவும் அதற்கான சிபில் ஸ்கோர் 800 ஆகவும் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Credit: Business standard

ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு கடன்

இதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கும் வீட்டு கடன் மீதான சிறப்புச் சலுகைகளை எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆறு இ.எம்.ஐ.க்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது மேலும் தவணை கட்டணத்தில் 48 மாத கால அவகாசம் போன்ற வசதிகளும் ரெடிமேட் (Ready to occupy) வீட்டை வாங்கும் வாடிக்கையாளருக்கு கிடைக்கின்றன.

நீங்கள் வீடு வாங்க திட்டமிட்டால் https://www.lichousing.com/ இந்த லிங்கை கிளிக் செய்து முழு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் படிக்க ...

குறைந்த விலையில் டிராக்டர் வாங்க வேண்டுமா? எளிய முறையில் கடன் வழங்குகிறது ICICI வங்கி!

விவசாயிகளே டிராக்டர் வாங்க விருப்பமா? எளிய முறையில் கடன் அளிக்கிறது SBI வங்கி!

பெண்களே தொழில் தொடங்க விருப்பமா?

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)