பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 September, 2021 10:03 AM IST
Home Remedies for Sensitive Teeth ! No need to approach the doctor!

பலருக்கு மிகவும் கூச்சம் ஏற்படும் பற்கள் உள்ளன, இதன் காரணமாக அவர்கள் குளிர்ச்சியாக அல்லது சூடாக எதையும் சாப்பிடும்போது பற்களில் கூச்சத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது பல் கூச்சம் என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் குளிர்ச்சியாகவோ சூடாகவோ ஏதேனும் சாப்பிட்டால், உங்கள் பற்களில் கூர்மையான கூச்ச உணர்வு இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் பல வகையான மருந்துகளை நாடுகின்றனர், ஆனால் இந்த பிரச்சனையை சமாளிக்க இது போன்ற சில வீட்டு வைத்தியம் செய்யலாம், இப்படி செய்வதால் உங்களது பிரச்சனையை நீங்கள் சமாளிக்க முடியும்.

அதிக பல்கூச்சத்திற்கு காரணம்

  • பல் துளைப்பானை வைத்து அழுத்தி பற்களை தேய்த்தல்
  • பயோரியா நோய்
  • புகையிலை மற்றும் குட்காவின் தொடர்ச்சியான பயன்பாடு
  • அதிக அமில உணவுகளை உண்ணுதல்
  • பல்லின் ஒரு பகுதி இழப்பு
  • ஈறுகளில் வீக்கம்
  • பற்களில் புழு

உங்களுக்கு பல்கூச்சம் இருக்கும்போது என்ன சாப்பிட வேண்டும்

இதில், ஆப்பிள் மற்றும் வாழைப்பழங்கள், சாலடுகள், ஸ்மூத்தி, பால், முழு தானியங்கள், ஓட்ஸ், முந்திரி, பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள், கேரட், பீட்ரூட், ப்ரோக்கோலி, உருளைக்கிழங்கு, பால் பொருட்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

உங்களுக்கு பல்கூச்சம் இருந்தால் என்ன சாப்பிடக்கூடாது

எலுமிச்சை, மாங்காய், புளி போன்ற புளிப்பு பொருட்கள், இனிப்பு பொருட்கள், மிட்டாய், ஐஸ்கிரீம், கார்பனேற்றப்பட்ட குளிர் பானங்கள், சோடா போன்றவை சாப்பிடக்கூடாது.

பல்கூச்சம் அகற்ற வீட்டு வைத்தியம்

உப்பு நீரில் கழுவுதல்

பற்கூச்சதை போக்க, காலையில் மற்றும் இரவில் தூங்குவதற்கு முன் 2 டீஸ்பூன் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்க வேண்டும்.

கடுகு எண்ணெய்

பல் கூச்சத்திலிருந்து விடுபட, 1/2 டீஸ்பூன் கல் உப்பு 1 டீஸ்பூன் கடுகு அல்லது தேங்காய் எண்ணெயில் கலந்து, பற்கள் மற்றும் ஈறுகளை மசாஜ் செய்து 5 நிமிடங்களுக்குப் பிறகு கொப்பளிக்கவும்.

வேப்பங்குச்சி

பல்துளைப்பான் வைத்து அழுத்தி பல் துலக்குவதற்குப் பதிலாக வேப்பங்குச்சியைப் பயன்படுத்த வேண்டும். இது பல் கூச்சத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

பச்சை வெங்காயம்

ஒரு சிறிய துண்டு வெங்காயத்தை பற்களில் 5 நிமிடங்கள் வைத்து அழுத்தவும். இதற்குப் பிறகு, உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்கவும்.

மேலும் படிக்க...

மஞ்சள் பல் பிரச்சனைக்கான சக்தி நிறைந்த வீட்டு வைத்தியம்

English Summary: Home Remedies for Sensitive Teeth ! No need to approach the doctor!
Published on: 27 September 2021, 10:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now