Health & Lifestyle

Thursday, 05 May 2022 04:21 PM , by: Poonguzhali R

Homeopathy treatment and its benefits!

இயற்கையான பொருட்கள், பெரிய அளவுகளில், பொதுவாக ஆரோக்கியமான மக்களில் எதிர்ப்புச்சக்தியை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.

ஹோமியோபதி மூலம் குணமாகும் நோய்களில் சில கீழே கொடுக்கப்படுகின்றன.

1. ஆட்டோ இம்யூன் நோய்கள்: உடலின் நோயெதிர்ப்பு அமைப்பில் உள்ள ஆரோக்கியமான செல்களைத் தாக்கும் நோய் இது ஆகும். அதாவது, முடக்கு வாதம், செலியாக் நோய், ஸ்ஜோகிரென்ஸ் நோய்க்குறி, அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ், அலோபீசியா போன்றவையைக் குறிக்கலாம்.

2. சீரழிவு நோய்கள்: பாதிக்கப்பட்ட திசுக்கள் அல்லது உறுப்புகளின் செயல்பாடு காலப்போக்கில் மோசமாக மாறும். இதில் கீல்வாதம், புற்றுநோய்கள், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை அடங்கும்.

3. மாதவிடாய் கோளாறுகள் : மாதவிடாய் கோளாறுகள் என்பது ஒரு பெண்ணின் இயல்பான மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்கும் பிரச்சனைகள் ஆகும். அவை டிஸ்மெனோரியா, மெனோராஜியா, அமினோரியா போன்றவை இதில் அடங்கும்.

4. மனநல நோய்கள்: இவை ஒரு நபரின் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தை அல்லது மனநிலையைத் இடையூறு செய்யும் பரந்த அளவிலான பிரச்சனைகளைக் குறிக்கின்றன. அவையாவன, ஆட்டிசம், இருமுனைக் கோளாறு, மனச்சோர்வு போன்றவை.

5. கடுமையான அல்லது பருவகால நோய்கள்: இவை திடீரென தொடங்கும். பருவகால நோய்கள், வெவ்வேறு பருவங்களில் சுற்றுச்சூழல் நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்தால் எழுகின்றன. இவற்றின் கீழ் அனைத்து வகையான காய்ச்சல்கள், ஜலதோஷம், தொண்டை தொற்று, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், ஒவ்வாமை போன்றவை அடங்கும்.

ஹோமியோபதியில், ஒவ்வொரு நோய்க்கும் அதன் அடிப்படைக் காரணத்தையும் அதன் அறிகுறிகளையும் புரிந்துகொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட உத்தியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.அதோடு, அதற்கான தீர்வும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதன் செயல்முறையானது, மருந்தைத் தேர்ந்தெடுப்பது, மீண்டும் மீண்டும் சிகிச்சை அளிப்பது ஆகியவை மூலம் ஆற்றலைத் தீர்மானித்தல் போன்ற உள்ளீட்டுச் செயலபாடுகளைக் கொண்டிருக்கும்.

ஒரு நோயாளி முதன்முறையாக வரும்போது, ​​நோயாளியின் உடல்நிலை, உணவுப் பழக்கம், அவர்களின் விருப்பங்கள், வெறுப்புகள் போன்ற அனைத்து விவரங்களையும் சேகரித்தப் பின்னரே அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பல நோயாளிகளுக்கு ஹோமியோபதி சிகிச்சை பாதுகாப்பானதா என்ற கவலை உள்ளது. ஆம், இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் எந்த வகையான நோயாளியும் இந்த சிகிச்சையைப் பெறலாம், என வல்லுநர்களால் கூறப்படுகிறது.

ஹோமியோபதி மருந்துகளில் அதிக அளவு ஆல்கஹால் இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள் ஆனால் அது உண்மையல்ல. அதில் ஒரு துளி கூட நோயாளியின் உடலுக்குள் செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஹோமியோபதி மருந்துகள் மதுவின் நச்சுத்தன்மையையோ அல்லது எந்த விதப் பக்க விளைவையோ ஏற்படுத்தாது என்பதில் நாம் தெளிவு பெற வேண்டும்.

மிக முக்கியமாக ஒரு தொழில்முறை ஹோமியோபதி மருத்துவரை அணுகுவது சரியானது. எந்தவிதமான பக்கவிளைவுகள் குறித்து அச்சம் தேவையில்லை எனவும் வல்லுநர்களால் கூறப்படுகிறது. எனவே, இயற்கை மருத்துவத்தை நாடி, பக்கவிளைவு இல்லா ஆரோக்கியமான சிகிச்சையைப் பெறுங்கள்.

மேலும் படிக்க

வயிற்றுப் புற்றுநோயும் அதன் அறிகுறியும்! விளக்கம் உள்ளே!

என்னது? தோல் அரிப்பும் கோவிட்-இன் அறிகுறியா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)