எவ்வளவுதான் நாம் விரும்புவதைச் சாப்பிட்டாலும், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறதா என்பதையும் மறுபுறம் யோசிக்க வேண்டியதும் அவசியம். ஏனெனில், புதுப்புது நோய்கள், வெவ்வேறு உருவத்தில், நம்மைத் தாக்கக் காத்திருக்கின்றன. கெரோனா பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
எனவே இனிவரும் நாட்களில், நாம் உண்ணும் உணவில் சத்துள்ள பொருட்களைச் சேர்ந்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
அந்த வகையில், பால் என எடுத்துக்கொண்டால், மாட்டுப்பால் உடலுக்கு மிகவும் உகந்தது. குறிப்பாக பசும்பால் கொழுப்புச்சத்து குறைந்தது என்பதால், குழந்தைகளுக்கு வழங்குவது சிறந்தது.
அதே நேரத்தில் புரோட்டீன் மற்றும் கொழுப்புச்சத்து மிகுந்த எருமை மாட்டுப்பால் நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைப் பயக்கின்றது.
எருமைப்பால்
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில், பெரும்பாலான மக்கள் தங்கள் ஆரோக்கியத்திற்காக எருமைப்பாலையேப் பயன்படுத்துகின்றனர். ஏனெனில், எருமைப்பாலில் புரோட்டின் 4.5 கிராம், கார்போஹைட்ரேட் 4.9 கிராம், கொழுப்புச்சத்து 8 கிராம் இவற்றுடன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் A மற்றும் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக பசும்பாலில் இருப்பதைவிட சற்று அதிகமான கொழுப்புச்சத்தும் கொண்டது.
எருமைப்பாலின் 6 முக்கிய பயன்கள்
புரதச்சத்து நிறைந்தது (High Proteins)
உடல் தசைகள் வலுவடையவும், ஆணழகனாகவும் மாற விரும்பும் இளைஞர்கள், அதிகப் புரதச்சத்து நிறைந்த எருமைப்பாலை தினமும் பருகுவது நல்ல பலனைத் தரும். அதேபோல உடலில் உள்ள என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் செயல்பாட்டிற்கும் எருமைப்பால் சிறந்தது.
வளர்ச்சியைத் தூண்டுகிறது (Development)
எருமைப்பால், பசும்பால் இரண்டிலுமே புரதச்சத்து அதிகளவில் காணப்படுகின்றன. எனினும், எருமைப்பாலை விட பசும்பாலில் 10 சதவீதம் புரதச்சத்து அதிகம். இதனால் குழந்தைகள், இளைஞர்கள் என அனைவருக்கும் வளர்ச்சியைத் தூண்ட உதவுகிறது எருமைப்பால்.
இதய ஆரோக்கியம் (Health to Heart)
எருமைப்பால் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிக மிக உகந்தது. ஒரு டம்ளர் எருமைப்பாலில் 412.4 கிராம் கால்சியம் உள்ளது. இந்த கால்சியம், ரத்த அழுத்தத்தை சமன்செய்து, இதயத்திற்கு ரத்தம் சீராகப் பாய்வதை உறுதி செய்கிறது.
எலும்புகள் வலிமை (Strenght to Bone)
எருமைப்பாலில் கால்சியம் மட்டுமல்ல, மெக்னீஷியம், துத்தநாகம் , பாஸ்பரஸ் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருப்பதால், எலும்பை வலுவடையச் செய்கிறது. மேலும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும் அரணாகச் செயல்படுகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity)
எருமைப்பாலில் நிறைந்துள்ள வைட்டமின் A, வைட்டமின் C ஆகியவை நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டி உடலை நோய்கள் அண்ட விடாமல் தடுக்கின்றன.மேலும் இவ்விரு வைட்டமின்களும், மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடென்டுகளாக செயல்பட்டு, உடலை சுத்தப்படுத்துகிறது.
சரும பராமரிப்பு (Skin Care)
எருமைப்பாலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் வைட்டமின்கள், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள பயன்படுகிறது. எனவே வீட்டில் ஃபேஷியல் செய்துகொள்ளும்போது, எருமைப்பாலைக் கொண்டு முதலில் முகத்தை சுத்தம் செய்து கொள்வது நல்லது. முகப்பூச்சிலும் எருமைப்பாலைக் கலந்து பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க...
நோய்களைத் துவம்சம் செய்யும் முர்ரா எருமை- பால் பண்ணை அமைக்கச் சிறந்த இனம்!