இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 13 August, 2022 11:05 AM IST

நானும் கூட பீஃப் பிரியாணி சாப்பிடுவேன். உணவு என்பது தனி மனித உரிமை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். பீப் பிரியாணி அரங்கம் அமைக்க பீஃப் பிரியாணி கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெறும் உணவுத் திருவிழாவில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் உணவு சுவைத்து மகிழ்ந்தனர்.
சென்னைத் தீவு திடலில் சிங்கார சென்னை உணவு திருவிழா 2022 தொடங்கியுள்ளது. இதன் துவக்க விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார் உணவு பாதுகாப்பு துறை இயக்குனர் செயலாளர் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

150 அரங்குகள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், சிங்காரச் சென்னை உணவு திருவிழா" என்ற தமிழகத்தின் பாரம்பரிய உணவு சுவை மிக்க உணவு, உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத உணவுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. தலைப்பில் மூன்று நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில், 150 அரங்குகள் மூலம் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

விழிப்புணர்வு

உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை, சிறுதானிய உணவுகள் உட்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு இந்த உணவு கண்காட்சியின் மூலம் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், இந்த உணவுத் திருவிழாவில் தினம்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று உணவுகளை சுவைப்பதுடன் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் எத்தகைய உணவு முறைகள் தங்கள் உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம் எனவும் கூறினார்.

பீஃப் பிரியாணி

இந்த உணவு கண்காட்சியில் மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவுகளுக்கு தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பீஃப் பிரியாணிக்கு ஏன் அரங்கு அமைக்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், நான் கூட பீஃப் பிரியாணி சாப்பிடுவேன், உணவு என்பது தனி மனித உரிமை பீஃப் பிரியாணி அரங்கம் அமைக்க அமைக்க கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அனுமதி வழங்கப்பட்டு இருப்போம் எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

சைக்கிள் எஸ்ஐ-ஒன்றல்ல, இரண்டல்ல, 22 ஆண்டுகள்!

பிரஷர் அதிகமானால் ஒரு கப் தயிர் போதும்!

English Summary: I too eat beef biryani-minister information!
Published on: 13 August 2022, 11:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now