1. வாழ்வும் நலமும்

புற்றுநோய் வராமல் தடுக்கும் வாழைக்காய்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

குலம் தளைக்க வைக்கும் வாழையின், இலை, காய், கனி, தண்டு, பூ, நார் என அனைத்துமே நமக்கு பயன் அளிக்கின்றன. இதில், வாழைக்காயைத் தவறாமல், உணவில் சேர்த்துக்கொள்வது, புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்பது தெரியுமா? உண்மை அதுதான்.

புற்றுநோய் என்பது யாருக்கும், எப்போதுவேண்டுமானாலும், உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படக்கூடிய ஒரு தீவிர நோயாகும். பல வகையான புற்றுநோய்கள், உடலின் வெவ்வேறு பாகங்களை வெவ்வேறு வழிகளில் பாதிக்கலாம். எனவே புற்றுநோயின் அபாயத்தைப் பற்றி கவனமாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்று.

அதே நேரத்தில், புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் காரணிகளைத் தவிர்க்க மக்களிடையே விழிப்புணர்வு தேவை என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

புற்றுநோய்க்கு காரணம்

நமது உணவு முறையாலும் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது. ஜங்க் ஃபுட் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட்களை சாப்பிடுவதும் புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும். அத்தகைய பழங்களில் ஒன்று வாழை.இது ஆண்டு முழுவதிலும் எளிதாகக் கிடைக்கும் வாழை, உயிர் வாழும் நாட்களை அதிகரிக்கிறது. இருப்பினும், வாழைக்காயை அனைவரும் சமைத்து சாப்பிடுவதில்லை. உண்மையில், வாழைக்காயை சமைத்து உண்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதிய ஆய்வின்படி, வாழைக்காய் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.

ஆய்வு

புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி, வாழைக்காயில் உள்ள ஸ்டார்ச் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் நியூ கேஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். லிஞ்ச் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு 20 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்டது. இந்த நோயாளிகளுக்கு மலக்குடல் புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து மிகவும் அதிகம்.

வியப்பூட்டிய ஆய்வு முடிவு

இந்த நோயாளிகள் அனைவரும் வாழைக்காயில் உள்ள மாவுச்சத்தை உட்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். சிறிது காலம் கழித்து, அந்த நோயாளிகளுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டபோது, கிடைத்த முடிவுகள் ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

மேலும் படிக்க...

சைக்கிள் எஸ்ஐ-ஒன்றல்ல, இரண்டல்ல, 22 ஆண்டுகள்!

பிரஷர் அதிகமானால் ஒரு கப் தயிர் போதும்!

English Summary: Bananas that keep you alive - prevent cancer! Published on: 12 August 2022, 10:40 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.