இயந்திரமயமான வாழ்வியல் முறை, நம்மை இயற்கையை விட்டு வெகுதூரம் அழைத்துச் சென்றுவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. இதன் அடிப்படையிலேயே எலும்புகள் இளம் வயதிலேயே வலுவிழக்கத் தொடங்கி விடுகின்றன.
இதனால், பிற்காலத்தில் பல நாம் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே உங்கள் எலும்புகள் இளம் வயதிலேயே பலவீனமாக இருப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிந்து கொண்டு, இந்த பழக்கங்களை சரியான நேரத்தில் மாற்றுவதன் மூலம் உங்கள் எலும்புகளை வலுப்படுத்தலாம்.
சோம்பல்
சுறுசுறுப்பில்லாமல் எப்போதும் சோம்பேறித்தனமாகவேத் திகழ்வது.
உண்மையில், சோம்பல் அதிகம் இருந்தால், உடலின் இயக்கம் குறைகிறது. உங்கள் எலும்புகளை வலுப்படுத்துவதில், உடல் இயக்கம் முக்கிய பங்களிக்கிறது. எனவே, முடிந்த அளவு முதலில் சோம்பலை அகற்றி, சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யவும். இதனால் எலும்புகள் வலுவடையும்.
அதிக உப்பு
அதிக உப்பைப் உணவில் சேர்த்துக்கொள்வது, உணவுக்கு மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்திற்கும் அவ்வளவு நல்லதல்ல. ஏனெனில், அவ்வாறு சேர்த்துக்கொள்ளப்படும் உப்பு, உடலில் உள்ள எலும்புகளை பலவீனமடையச் செய்துவிடுகிறது. உப்பில் உள்ள சோடியம் உடலில் கால்சியத்தை உறிஞ்சுகிறது. ஊறுகாய், வடகம் போன்றவற்றில் உப்பு மிக அதிகமாக இருக்கும் என்பதால், அவற்றை மிக குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
சூரிய ஒளி
இன்று பலரும் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் வைட்டமின்-டி குறைபாடும் அதிகம். என்ன தான் செயற்கை மருந்து வகைகளை சாப்பிட்டாலும், வலுவான எலும்புகளுக்கு சூரியனில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி மிகவும் முக்கியமானது என்று நம்பப்படுகிறது.
புகைபிடிக்கும் பழக்கம்
எலும்பு ஆரோக்கியத்தை பொறுத்தவரை புகைபிடிப்பவர்களும் மிக கவனமாக இருக்க வேண்டும். புகைபிடித்தல் நம் நுரையீரலை மட்டுமல்ல, நம் எலும்புகளையும் பாதிக்கிறது.
ஊட்டச்சத்துக் குறைபாடுகள்
உணவில் போதுமான ஊட்ட சத்துக்களை சேர்க்காததும் பெரிய தவறு. இளையத் தலைமுறையினரிடையே துரித உனவுகள் சாப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் எலும்புகள் பலவீனமடைகின்றன. இது தவிர, போதுமான தூக்கம் இல்லாததாலும் எலும்புகள் பலவீனமடைவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இவற்றைத் தவிர்த்தால், எலும்புகள் பலவீனமடைவதைத் தவிர்க்கலாம்.
மேலும் படிக்க...
கொரோனாவால் அதிகரித்த ஆண்மைக் குறைபாடு பிரச்னை - ஆய்வில் தகவல்!