முக்கனிகளின் ஒன்றான இந்தப்பழத்தை நினைத்தாலே நாவில் எச்சில் ஊரும். ஒவ்வொரு ஆண்டும், கோடை காலம் வந்தால்தான் இதன் வரவு இருக்கும்.
எனவே கோடைவெயில் அடிக்கிறதே என வருத்தப்பட்டாலும், இந்த பழத்தை ருசிக்கப்போகிறோம் என எண்ணி நம்மை ஆறுதலடையச் செய்கிறது.
மாம்பழம் (Mango)
பழங்களின் அரசனாகத் திகழும் இந்தக் பழத்தில், பிஞ்சு, காய், கனி, இலைகள் என அனைத்துமே நமக்குப் பலவகைகளில் பயன்படுபவை. ஆம் நாம் பார்க்கப்போவது மாம்பழத்தைப் பற்றித்தான்.
நிறம், சுவை என பலவித மாம்பழங்கள் நம் நாட்டில் விளைகின்றன. இதில், சுவைக்கு ஏற்றவாறு, வாடிக்கையாளர்கள் கூடுகிறார்கள்.
மாம்பழங்களில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இருப்பினும், அளவுக்கு அதிகமாக மாம்பழங்களைச் சாப்பிட்டால், உங்கள் உடல் நலத்திற்கு கேடும் ஏற்படுகிறது. அவை என்னென்ன பாதிப்புகள் என்றப் பட்டியல் இதோ உங்களுக்காக.
பேதி (Diarrhea)
அதிகமாக மாம்பழங்களைச் சாப்பிட்டால், பேதி ஏற்படக்கூடும். ஏனெனில் மாம்பழத்தில் உள்ள அதிக நார்ச்சத்து வயிற்று உபாதையை ஏற்படுத்துகிறது. அதிலும், கோடை காலத்தின் தொடக்கத்தில், கார்பைடு கற்களை மூலம் பழக்கவைக்கப்படும் மாம்பழங்களை வாங்கிச் சாப்பிடுவது, உடலுக்கு பல்வேறு கேடுகளைக் கொண்டு வரும்.
சர்க்கரை நோயாளிகள் (Diabetics)
நீரழிவு நோயாளிகள் அதிகளவில் மாம்பழங்களைச் சாப்பிடுவது, ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
உடல் சூடு (Body heat)
அதிகளவில் மாம்பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது, உடல் சூட்டை அதிகரிக்கும். இதனால், தலைவலி, முகத்தில் பருக்கள், வயிற்றுவலி ஆகியவற்றுக்குச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும்.
ஜீரணக் கோளாறு (Digestive disorder)
-
ருசிக்கு அடிமையாகி, அதிகளவில் மாம்பழங்களை எடுத்துக்கொள்வது, ஜீரணக் கோளாறுக்கு வழிவகுக்கும்.
-
சிலருக்கு மாம்பழமே அலர்ஜியாக இருக்கும். கண்களில் நீர் வடிதல், சுவாசக்கோளாறு, சளி போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
உடல் எடையை அதிகரிக்கும் (Increasing body weight)
-
உடல் எடைக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் மாம்பழத்தை அதிகளவில் எடுத்துக்கொண்டால், உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
-
இருப்பினும், அளவுக்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சு என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, மாம்பழங்களை அளவோடு சாப்பிட்டு நம் ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம்.
மேலும் படிக்க...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!
பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!