1. வாழ்வும் நலமும்

ஃப்ரிட்ஜில் காய்கறி மற்றும் உணவுப் பொருட்களை எத்தனை நாட்கள் வைக்கலாம்?

KJ Staff
KJ Staff
Fridge

Credit : Dinakaran

நம்முடைய அத்தியாவசிய பொருட்களில் குளிர்சாதனப் பெட்டி மிகவும் முக்கியமானது. நாம் சமைக்கும் உணவுகளை மட்டுமில்லாமல், இறைச்சி, பால், காய்கறி (Vegetable), அரைத்து வைத்துள்ள மாவுகள், மிளகாய்ப் பொடிகள் என எது மீதமாக இருந்தாலும், அதை ஃபிரிட்ஜில் வைப்பது வழக்கமாகிவிட்டது. அவ்வாறு வைக்கும் பொருட்களை எவ்வளவு நாள் வைக்கலாம் என்று பலருக்கு தெரியாது. கடையில் வாங்கிவந்த பொருட்களை எவ்வளவு நாள் வைக்கலாம் என்று இப்பொழுது காண்போம்.

எத்தனை நாட்கள் வைக்கலாம்?

  • பீன்ஸ் (Beans), வெண்டைக்காய், காலிபிளவர் போன்ற காய்கறிகள் இரண்டு நாட்கள் வைக்கலாம்.
  • தக்காளி (Tomato), பட்டாணி ஐந்து நாட்கள்
  • பாக்கெட் பால் - அதன் காலாவதி நாள் வரை
  • காய்ச்சிய பால் என்றால் அன்றைய தினம் மட்டும்
  • சீஸ், வெண்ணெய் - ஒரு வாரம்
  • மட்டன், சிக்கன் - 1 நாள்
  • சமைத்த மீன் என்றால் 2 நாள்
  • சமைத்த உணவினை அன்றன்றே சாப்பிடுவது நல்லது.
  • ஃபிரிட்ஜில் இரண்டு நாள் வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் பல வித உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எந்த உணவாக இருந்தாலும் ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து சுட வைத்த பின்னரே சாப்பிட வேண்டும். அதே போல் காய்கறி அல்லது பாக்கெட் பால் (Pocket milk) போன்றவற்றை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து தண்ணீரில் அரை மணி போட்டு வைத்து பின்னர் பயன்படுத்தலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவுப் பொருட்களை அதிக நாட்கள் வைத்து உண்ணாமல், இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்தி விடுவது மிக நல்லது. அப்படி, தகுந்த நேரத்தில் பயன்படுத்த முடியாமல் போனால், அதன் தரம் கெட்டு விடும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

அழகிய ரோஜா மலரின் அற்புத மருத்துவ குணங்கள்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கசப்புத் தன்மையில்லாத பழுபாகற்காய்!

English Summary: How many days can I keep vegetables and food in the fridge?

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.