உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஓய்வு என்பது அத்தியாவசியமான ஒரு விஷயம் என்பது மறுக்க முடியாதது. நம் அடுத்த கட்ட நகர்வுக்கும், அடுத்த கட்ட சுறுசுறுப்புக்கும் ஓய்வு ஒன்று அடிப்படையான விஷயம் ஆகும். அதிலும், மனிதர்களுக்கு ஓய்வு மிகவும் அவசியமானது. மனிதர்களின் ஓய்வு தூக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது . ஆனால், தற்போதைய யுகத்தில் யாரும் சரியான நேரத்தில் தூங்குவது இல்லை.
பலரும் ஓய்வு என்பது வீணானது, பயனற்றது மற்றும் உற்பத்தித் திறனை பாதிக்கிறது என்று நினைத்து வருகின்றனர். ஆனால், அதேநேரத்தில் அதிக அளவு ஓய்வு எடுத்துக் கொள்வதும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் ஓஹியோ மாநில பல்கலைக் கழகத்தின் தலைமையிலான புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இதுகுறித்த, ஆய்வு சமூக உளவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், ஓய்வு நேரத்தை குறைவாக அனுபவித்த மக்கள், அதிக அளவு மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். அதேநேரத்தில், குறைவாக ஓய்வு கொண்டவர்கள் குறைந்த அளவிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஓய்வு எடுத்துக் கொள்வது அதிக அளவு மனநல நன்மைகளைக் கொண்டுள்ளது என்றாலும், அதிக அளவு ஓய்வு எடுத்துக் கொள்வது மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடும்.
இது குறித்த ஆய்வில், 199 கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். ஆய்வில் அவர்களின் பொழுதுபோக்கு நிகழ்வுகள், மகிழ்ச்சி, மனச் சோர்வு, பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்ற விஷயங்கள் அளவிடப்பட்டன. அதேநேரத்தில் அவர்களின் ஓய்வு நேரமும் கணக்கிடபட்டன. ஆனால், இது போன்ற ஓய்வு நேரங்கள் பெரும்பாலும் வீணாக செலவிடப்படுகின்றன.
அதிக ஓய்வு கூட உயர் ரத்த அழுத்தத்துடன், அதிக மன அழுத்தத்தைத் உருவாகக்கூடும். முறையற்ற அதிக ஓய்வினால் உயர் இரத்த அழுத்த ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக துக்கமின்மை ஏற்படுவது மட்டுமல்லாமல், அலர்ஜி போன்றவை ஏற்படும். இதனால் மன அழுத்தம் ஏற்படுவதோடு, மாரடைப்பு ஏற்படவும் அதிகளவில் வாய்ப்புள்ளது.
பலரும் ஓய்வு என்பதை பார்ட்டி மற்றும் பப்புகளில் செலவிடைவதையே ஓய்வு என்று கருதுகிறார்கள். இது தவறான எண்ணமாகும். ஓய்வு எடுத்துக் கொள்வது உடலுக்கு மட்டுமின்றி, நமது மூளைக்கும் தேவைப்படும் ஒரு விஷயம். சரியான பல வழிகளில் கூட நீங்கள் உங்களின் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தலாம். உடற்பயிற்சி, யோகா, தியானம், மனமகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றில் கூட நேரத்தை செலவிடலாம்.
மேலும் படிக்க: