இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 24 April, 2022 4:22 PM IST
Is it good for diabetics to eat this in summer?

முறையற்ற நீரேற்றம் இரத்த சர்க்கரை அளவை பெரிய அளவில் பாதிக்கிறது, அதனால்தான் நீரிழிவு நோயாளிகள் கோடையில் தங்கள் உணவை சரிவர கண்காணிக்க வேண்டும். அதோடு, இனிப்புச் சாறுகளைத் தவிர்க்க வேண்டும்

வெயிலில் வெளியில் இருக்கும்போது ஒரு கிளாஸ் பழச்சாற்றைத் தவிர்ப்பது கடினம். ஆனால் சர்க்கரை ஏற்றப்பட்ட பானங்கள் வெப்பத்திலிருந்து தற்காலிக ஓய்வு அளிக்கும். ஆனால் அது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுக்காது. பழச்சாறுகளும் நார்ச்சத்து இல்லாதவை. இதிலிருந்து விடுபட கோடைக் காலத்தில் வெளியே செல்லும் போது தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்வது நல்லது.

அதிக நார்ச்சத்து சாப்பிட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் நார்ச்சத்து அதிகம் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் நார்ச்சத்துகள் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் வெளியீட்டை குறைவாக்கும் மற்றும் இரத்த குளுக்கோஸ் ஸ்பைக்கை தடுக்கும்.
மாம்பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும். அதோடு, ஒரு நேரத்தில் மாம்பழம் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.

உடலை நீர் ஏற்றம் உடையதாக வைத்திருக்க வேண்டும். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்திருங்கள். நீரேற்றம் இரத்தச் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தில் இருந்து கூடுதல் நச்சுகளை வெளியேற்றுகிறது.

உணவுகளின் கிளைசெமிக் குறியீட்டை (ஜிஐ) சரிபார்க்க வேண்டும். இது மாம்பழங்களின் சீசன் என்பதால், நுகர்வு விகிதத்தில் கவனமாக இருக்க வேண்டும். மாம்பழங்களை கண்டிப்பாக அளவோடு சாப்பிட வேண்டும், மற்ற உணவுகளையும் சாப்பிட வேண்டும். பழங்களை சாப்பிடுவதற்கு முன், GI அளவை சரிபார்க்க மறக்காதீர்கள்.

உணவு மாறுபாட்டை முயற்சிக்க வேண்டும். உணவில் அதிக மாறுபாடுகள் இருக்க முயற்சி செய்யுங்கள். அதிக நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, உங்கள் மாலை நேர சிற்றுண்டிகளுக்குப் பதிலாக வெள்ளரிக்காய் அல்லது தர்பூசணித் துண்டுகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் 90% பழங்கள் தண்ணீரால் ஆனது என்பதால், இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.

கோடை காலத்தில் வேறு என்ன செய்ய வேண்டும் என்றால், நீங்கள் இன்சுலின் பயன்படுத்தினால், அதை குளிர்ந்த இடத்தில் பாதுகாத்து வைக்க வேண்டும். குளுக்கோஸ் மீட்டர் மற்றும் சோதனை கீற்றுகளைச் சாதாரண வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். வெப்பம் இவற்றை சேதப்படுத்தும்.

மேலும் படிக்க

அத்தியாவசியமான 143 பொருட்களின் GST வரியை உயர்த்துகிறது: ஜிஎஸ்டி கவுன்சில்?

100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் ஃபெர்டிகுளோபல் டிரான்ஸ்ஃபார்மிங் உர உற்பத்தி

English Summary: Is it good for diabetics to eat this in summer?
Published on: 24 April 2022, 04:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now