பாலை நீங்கள் சரியான முறையில் குடிக்கவில்லை என்றால், உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மை அதுதான்.
உடல் நலத்தைப் பேணிப் பாதுகாக்க விரும்புபவர்கள், இரவு நிச்சயம் பால் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்குகிறார்கள் மருத்துவர்கள்.நீங்கள் தொடர்ந்து பால் குடிப்பவரா? அப்படியானால் கண்டிப்பாக நீங்கள் இதை படிக்க வேண்டும். பால் என்பது நமது அன்றாட உணவில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துவது முதல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது வரை, படுக்கைக்கு செல்லும் முன் அல்லது நாள் தொடங்கும் போது பால் குடிப்பது கட்டாயமாகும்.
பிரச்னைதான்
ஆனால் இந்த ஊட்டச்சத்து நிறைந்த பாலை நீங்கள் சரியான முறையில் குடிக்கவில்லை என்றால், உங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்கு இது காரணமாக இருக்கலாம்.
பச்சைப்பால்
பாலில் என்சைம்கள் மற்றும் ஆரோக்கியமான புரதங்கள் நிறைந்துள்ளன. பச்சைப் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்களை நம் உடல் உறிஞ்சுகிறது, இருப்பினும், கிருமிகள் மற்றும் பாக்டீரியாவைக் கொல்ல பேஸ்டுரைசேஷன் பிராசஸ் செய்யப்படுகிறது, ஆனால் இது ஒவ்வாமை எதிர்வினைகளைத் தூண்டலாம் மற்றும் பல இருதய நோய்களுக்கு வழிவகுக்கும்.
தீமைகளும்
பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது, ஆனால் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது.பாலில் இயற்கையாகவே கால்சியம், பாஸ்பரஸ், பி வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இது தவிர, இது புரதத்தின் சிறந்த மூலமாகும், இது எலும்பு ஆரோக்கியம், செல் மற்றும் திசு மீளுருவாக்கம், மூளை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பாரம்பரியமாக, பாலை அதன் மூல வடிவில் குடிப்பது மிகவும் ஆரோக்கியமானது என்று நம்பப்பட்டது. உண்மையில், இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் எந்தச் பிராசஸிங்கும் இல்லாமல் விலங்குகளின் பால் குடிப்பது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.
குடித்தால் என்னவாகும்
பச்சைப் பால் குடிப்பது மிகவும் தீங்கு விளைவிக்கும், ஏனெனில் அதில் லிஸ்டீரியா, ஈ.கோலி, காக்ஸியெல்லா, சால்மோனெல்லா, கேம்பிலோபாக்டர், யெர்சினியா போன்ற பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் இருக்கலாம்.
இது பல உடல்நலம் மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சில சந்தர்ப்பங்களில், விலங்கு உடலில் சில நோய்த்தொற்றுகள் இருந்தால், பச்சை பால் குடிப்பது கடுமையானதாக மாறும்.
உபாதைகள்
இது குமட்டல், செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம், பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம், மேலும் குய்லின் பாரே நோய்க்குறி மற்றும் ஹீமோலிடிக் யுரேமிக் சிண்ட்ரோம் போன்றவற்றுக்கும் வழிவகுக்கலாம். இருப்பினும், பாரம்பரிய மருத்துவத்தின்படி, பச்சை பாலில் ஆண்டிபயாடிக் பண்புகள் மற்றும் செரிமானத்தை அதிகரிக்கக்கூடிய நன்மை பயக்கும் என்சைம்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே பாலை எப்படிக் குடிப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க...