இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 August, 2021 3:19 PM IST
pimples a problem

முகத்தில் பருக்கள் மற்றும் இந்த பருக்கள் காரணமாக ஏற்படும் புள்ளிகள், முதுமை ஏற்படுவது போன்றவை பொதுவானவை. ஆனால் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற முகத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்க்கும் அத்தகைய ஃபேஸ் பேக் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். ஆம் இது நம் வீட்டிலேயே கிடைக்க கூடிய காபி ஃபேஸ் பேக் பற்றி பேசுகிறோம். ஆம்,காபி குடிப்பதால் உங்களுக்கு தூக்கம் வருவது மட்டுமல்லாமல் பருக்கள் விலகி ஓடும். எனவே காபி ஃபேஸ் பேக் செய்யும் முறை மற்றும் அதன் பயன்களை தெரிந்து கொள்வோம்.

காபி மற்றும் தேன்

உங்களுக்கு பருக்கள் பிரச்சனை இருந்தால், உங்கள் முகத்தில் காபி மற்றும் தேன் ஃபேஸ் பேக் தடவவும். இதை செய்ய, ஒரு தேக்கரண்டி காபி பொடியை எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கவும். இந்த இரண்டையும் ஒன்றாக கலக்கவும். இப்போது இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். அது காய்ந்ததும் 15 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும். இந்த தீர்வை நீங்கள் வாரத்திற்கு 1 முதல் 2 முறை பின்பற்றலாம்.

காபி மற்றும் மஞ்சள்

காபி மஞ்சள் ஃபேஸ் பேக் உங்கள் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை செய்ய, ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் காபி தூள், அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருங்கள். இந்த ஃபேஸ் பேக் பருக்களை அகற்ற உதவுகிறது.

காபி தூள் மற்றும் எலுமிச்சை

ஒரு காபி எலுமிச்சை ஃபேஸ் பேக் செய்ய, ஒரு ஸ்பூன்ஃபுல் காபி எடுத்து அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இப்போது அவற்றை நன்கு கலந்து பேஸ்ட் செய்யவும். இதை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவவும். எலுமிச்சை சாறு உங்கள் முகத்தில் உள்ள அழுக்கை நீக்கி பளபளப்பைத் தருகிறது.

காபி மற்றும் பால்

ஒரு கரண்டி காபி தூள், 11/2 தேக்கரண்டி பச்சைப் பால் எடுத்து நன்கு கலக்கவும். இப்போது இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் விடவும். அதன் பிறகு முகத்தை சுத்தமான நீரில் கழுவவும். காபி மற்றும் பால் ஃபேஸ் பேக் சருமத்தை இறுக்கி, ஒளிரச் செய்கிறது.

மேலும் படிக்க...

நோய்களில் இருந்து தப்பிக்க, வேப்பிலை ஒன்று போதும்!

English Summary: Is pimples a problem? Things to do immediately!
Published on: 17 August 2021, 03:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now