1. வாழ்வும் நலமும்

நோய்களில் இருந்து தப்பிக்க, வேப்பிலை ஒன்று போதும்!

KJ Staff
KJ Staff
Neem Tree

ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஒவ்வொரு விதமான நோய்களும், சரும பிரச்சனைகளும் நமக்கு ஏற்படுவது வழக்கம்.  எல்லாவற்றிற்கும் நாம் மருத்துவரின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை.

நோய்களுக்கு அருமருந்து (Best Medecine)

பழங்காலத்திலும் இதே போன்ற பருவ நிலை மாற்றங்கள் நிகழ்ந்தன. அவர்கள் இயற்கையில் கிடைத்த மூலிகைகளை கொண்டு அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வு கண்டனர்.  அவற்றில் முதன்மையானதாக இன்றளவும் கூறப்படுவது வேப்பிலை மற்றும் மஞ்சள்.

வேப்பிலை என்பது இன்றும் ஆயுர்வேதத்திலும், சித்த மருத்துவத்திலும் தவிர்க்க முடியாத மருந்தாக இருந்து வருகிறது. வேப்பிலை, உள் மருந்தாகவும், வெளி மருந்தாகவும் பயன் படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, வேப்பிலை சாறு, விழுது, கஷாயம், பொடி என நோயின் தன்மைக்கு ஏற்ப பயன் படுத்தலாம். எவ்வகை மருந்தையும் விரைவாக தயாரிக்கலாம், அதே போன்று மிக விரைவாக செயல் படும் தன்மை கொண்டது. 

Neem Paste

உடலில் தோன்றும் கட்டி, அரிப்பு, அக்கி, சொரி,சிரங்கு மற்றும் சரும பிரச்சனைகளுக்கு வெளி பூச்சாகவும், அலர்ஜி, விஷக்கடி, நீரழிவு நோய், வயிற்று பூச்சி போன்ற பிரச்சனைகளுக்கு உள் மருந்தாகவும் பயன் படுத்தலாம். வேப்பமரத்தின் குச்சி, பட்டை, இலை, பூ, பழம், கொட்டை என அனைத்தும் கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு.

மருத்துவப் பயன்கள் (Medical Benefits)

  • வேப்ப முத்து, சிறிய வெங்காயம் ஆகியவற்றை நன்கு அரைத்து புழுவெட்டு ஏற்பட்ட இடங்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து  குளித்தால் முடி நன்றாக வளரும்.

  • வேப்பங் கொட்டையின் பருப்புகளை அரைத்து காயங்கள், புண்களின் மீது பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

  • வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பித்த வெடிப்புகள், நகசுத்தி போன்ற பிரச்சனைகளுக்கு பற்று போட்டால் பலன் கிடைக்கும்.

  • வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து, அறிய பின் அந்த நீரை கொண்டு முகம் மற்றும் கை, கால்கள் கழுவி வந்தால் சரும பிரச்சனைகள் அனைத்தும் தீர்வாகும். 

  • வேப்பம் விதையுடன் வெல்லம் சேர்த்து காலை மற்றும் மாலை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உள் மூலம், வெளி மூலம் தீரும்.

  • மாதம் ஒரு முறை வேப்பிலையை உட்கொள்ளும் போது வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும். வாந்தி, மயக்கம் போன்றவை குணமாகும்.சரியாக சாப்பிடாத குழந்தைகளுக்கு வேப்பிலை அரைத்து கொடுத்தால் வயிற்றை சுத்தம் செய்து பசியை தூண்டும்.

Neem oil
  • வேப்பம் பூவை நிழலில் உலர்த்தி சம்பிராணியுடன் சேர்த்து தூபம் போட்டால் காற்றில் உள்ள கிருமிகளை அழித்து விடும். அதே போன்று இலைகளை உலர்த்தி தூபம் போட்டால் கொசு போன்றவை வீட்டிற்குள் வராது.

நோய் எதிர்ப்பு சக்தி (Immunity)

  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மாதம் ஒருமுறை வேப்பம் பூ ரசம், துவையல் செய்து சாப்பிட வேண்டும்.

சருமப் பராமரிப்பு (Skin Care)

  • அனைத்து சரும பராமரிப்பிலும் வேம்பு முக்கிய பங்கு வைக்கிறது.  வேம்பு மற்றும் மஞ்சள் அரைத்து பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழிவினால் முகம் பொலிவு பெறும். முகத்தில் தோன்றும் பருக்கள் போன்றவற்றிற்கு எதிராக நன்கு செயல் படும்.

பல் ஆரோக்கியம் (Dental Care)

  • வேப்பங் குச்சி பல் துலக்குவதற்கும் , வாயில் உள்ள கிருமிகளையும் அழித்து புத்துணர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை தருகிறது.

  • வேப்ப எண்ணெய் மருந்துகள் தயாரிக்கவும், பூச்சிகளுக்கு எதிராகவும் தனித்து செயல் படுகிறது.

Anitha Jegadeesan
Krishi Jagran 

English Summary: One Herb That Heals Your Inner And External Problems: Amazing Health Benefits Of Neem Published on: 17 August 2019, 08:21 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.