சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 10 May, 2022 10:41 AM IST
Is the mango ripened with carbide stone? Simple tips to find!

நாடு முழுவதும், இனிக்கும் மாம்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில், சந்தையில் விற்பது 'கார்பைடு' கல்லால் பழுக்க வைத்த மாம்பழமா என்பதை இந்த எளிய டிப்ஸ்ஸைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கலாம்.

கோடைகாலம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மாம்பழங்கள்தான். அதிலும் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்கள் தன்னிகரில்லாத் தனிச்சுவை கொண்டவை. அதனால், அந்தப் பழங்களை எவ்வளவு விலைகொடுத்தும் வாங்கிச் சுவைக்க, தமிழக மக்கள் விரும்புவது வழக்கம்.

இது ஒருபுறம் என்றால், மாம்பழ சீசனில் இவற்றை முந்தி விற்பனை செய்து காசுபார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், வியாபாரிகள், கார்பைடு கல் கொண்டு, மாங்காய்களை செயற்கையாகப் பழுக்க வைத்து மாம்பழங்களாக மாற்றி விற்பனை செய்கின்றனர்.

உடல் நலத்திற்கு கேடு

இந்த மாம்பழங்களை வாங்கிச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பதால் இந்த முறையில் பழுக்க வைப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
ஆனாலும் குறுகிய காலத்தில் விற்று லாபம் பார்க்க, காய்களை செயற்கையாக பழுக்க வைக்கும் வியாபாரிகள் சிலர் மக்களின் உயிரோடு விளையாடுகின்றனர்.

கார்பைடுக்கு மாற்று

மாம்பழங்களை இயற்கையான முறையின் பழக்க வைக்க பல்வேறு யுக்திகள் உள்ளன. இதுகுறித்து, மதுரை வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன், உதவி பேராசிரியர் வள்ளல்கண்ணன் கூறியதாவது:
தமிழ்நாடு வேளாண் பல்கலை 'எத்திரல்' என்ற வளர்ச்சி ஊக்கியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பெயரில் பல்வேறு நிறுவனங்கள் திட, திரவம், வாயு இதை தயாரிக்கின்றன. வாழைப்பழத்திற்கும், மாம்பழங்களுக்கும் திரவ வடிவில் பயன்படுத்தலாம்.

பழுக்க வைப்பது எப்படி?

ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மில்லி 'எத்திரல்' திரவம் கலந்து அதில் ஒவ்வொரு மாம்பழத்தையும் 10 வினாடி மூழ்கவைத்து எடுத்தால் 2 நாட்களில் முழுவதுமாக இயற்கை முறையில் பழுத்துவிடும். சதைப்பகுதியும் பழமாகிவிடும். உடலுக்கு கெடுதல் இல்லை. இதைப் பயன்படுத்துவது நல்லது
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கண்டுபிடிப்பது எப்படி?

அதேநேரத்தில் நீங்கள் வாங்கும் மாம்பழம், கார்பைடு கல்லால் பழுக்க வைத்த மாம்பழமாக இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டால், அதனை அறுத்துப் பார்க்கவும். பழத்தின் தோல் மஞ்சள் நிறத்திலும், உள்ளே சதைப்பகுதி வெள்ளை நிறத்திலும் இருந்தால், அந்தப் பழம் கார்பைடு கல் மூலம் பழக்க வைத்தது. எனவே அதனை சாப்பிட வேண்டாம்.

மேலும் படிக்க...

தெவிட்டாத இனிப்பு- தெறிக்கவிடும் விலையில் நூர்ஜஹான் மாம்பழம்!

ரசாயனத்தால் பழுக்கவைத்த 7 டன் மாம்பழம் பறிமுதல்- வாடிக்கையாளர்களே உஷார்!

English Summary: Is the mango ripened with carbide stone? Simple tips to find!
Published on: 10 May 2022, 10:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now