சீதோஷணநிலைகளில் குளிர்காலம் என்பது எப்போதுமே அதிகளவில் நோய்களைக் கொண்டுவரும் காலமாகும்.
முன்னேற்பாடுகள் (Reservations)
அதனால், டெல்லி, சண்டிகார், உத்தர்காண்ட் உள்ளிட்ட கடுங்குளிர் நிலவும் மாநிலங்களில், நோய்களில் இருந்துத் தப்பிக்க பல்வேறு விதமான முன்னேற்பாடுகளை மக்கள் செய்துகொள்வது வழக்கம்.
அவ்வாறு அவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் வெல்லம். கரும்பில் இருந்து எடுக்கப்படும் வெல்லம் உடலுக்கு அத்தனை ஆரோக்கியத்தைக் கொடுக்க வல்லது.
வெல்லத்தின் மருத்துவப் பயன்கள் (Medical Benefits of Jaggery)
ஆரோக்கியம் (Health)
தமிழகம் போன்ற மாநிலங்களில், வெல்லம், எலுமிச்சை உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பானகரம் மிகவும் பிரபலம். இதனைக் கோவில்களில் கூட பிரசாதமாக வழங்குவது வழக்கம். இதனை அருந்துவதால், உடல் ஆரோக்கியம் பலப்படும்.
குளிரில் இருந்து தப்ப (Escape from cold)
குறிப்பாக வடமாநிலங்களில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நிலவும் கடுங்குளிரின்போது, வெல்லத்தை சுடு தண்ணீரில் கலந்துகுடிப்பது, உடலின் வெப்பநிலையை சீராக்கி, குளிரில் இருந்து தப்பிக்க உதவுகிறது.
உடலை சூடேற்றும் (Warming the body)
உடல் சூட்டை அதிகரிக்க வெல்லத்தண்ணீர் பெரிதும் இன்றியமையாதது. எனவே குளிர்காலங்களில் காலை வேளைகளில், வெதுவெதுப்பான வெல்லத் தண்ணீரை அருந்துவது நல்ல பலனைத் தரும்.
ஞாபக சக்தி (Memory power)
வெல்லத்தை இளம்வயது பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், உடலில் ரத்தத்தின் அளவை அதிகரித்து ஞாபக மறதியைத் தவிர்க்க உதவுகிறது.
ஆஸ்துமாவுக்கு நிவாரணம் (Relief for asthma)
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், வெதுவெதுப்பான வெல்லத் தண்ணீரைத் தொடர்ந்து பருகி வந்தால், நோயின் தாக்கம் படிப்படியாகக் குறையும். சளி, இருமல் போன்றவற்றிற்கும் நிவாரணம் கிடைக்கும். இதனால்தான் சித்தமருத்துவத்தில் வெல்லத்தை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.
செரிமானத்தைச் சீராக்கும் (Regulates digestion)
தினமும் உணவு உண்ட பின்பு ஒரு சிறிய வெல்லக்கட்டியை உண்பது, செரிமானத்தைச் சீராக்கும்.
உறுப்புகள் பலப்பட (Strengthen)
வெல்லத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உணவுக்குழாய், நுரையீரல், வயிறு என உடல் உறுப்புகளை சுத்தமாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
சமனில் வைத்துக்கொள்ள (To keep in balance)
வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமனில் வைத்துக்கொள்ள வெல்லத்தை தினமும் சாப்பிடுவது நல்லது. இதனால், உடலுக்கு இரும்புச்சத்தும், கால்சியமும் கிடைக்கிறது.
உடல் எடை குறைய (Weight Loss)
சர்க்கரையும், வெல்லமும் கரும்பில் இருந்து எடுக்கப்படுகின்றன. இருப்பினும் சர்க்கரையில் இருப்பது வெற்றுக் கலோரி. வெல்லம் பல்வேறு கனிமங்களையும், வைட்டமின்களையும் கொண்டிருப்பதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
மேலும் வெல்லத்தில் உள்ள பொட்டாசியம், உடலில் சோடியத்தின் அளவை சமன்படுத்தி, நீர் வற்றிப்போகாமல் செய்கிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் வெளியேற்றப்படுவது தூண்டப்பட்டு, வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், காலை வேளையில் வெதுவெதுப்பான தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து வெல்லம் தண்ணீரைக் குடித்துவர நல்ல பலன் கிடைக்கும்.
பக்கவிளைவுகள் (Side Effects)
வெல்லத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், உடலில் ஒவ்வாமை, வாந்தி ஆகியவற்றை உருவாக்கும். எனவே அளவாகப் பயன்படுத்துவதே சிறந்தது.
மேலும் படிக்க...
ஆஃப் பாயில் சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் பரவும் - மக்களே உஷார்!
கொழுப்பு இல்லா மோர் - உடல் எடையைக் குறைக்கும் Best Tonic!
ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!