Health & Lifestyle

Monday, 29 July 2019 05:33 PM

முகத்தில் ஏற்படும் பருக்கள், அவை விட்டுச் செல்லும் கரும் புள்ளிகள், உடல் சூட்டால் உண்டாகும் கொப்புளங்கள், இவைகளை பார்த்து பார்த்தே முகத்தின் பொலிவும், அழகும் குறைகிறது. எந்நேரமும் முகத்தை குறித்த வருத்தம். எப்படி இதனை குணப்படுத்துவது, தழும்புகள் நீங்கிவிடுமா? இந்த பிரச்சனையால் அவதி படும் உங்களுக்காக எளிய மற்றும் சிறந்த தீர்வு.

வேப்பிலை, மஞ்சள், கொட்டைமுத்து (ஆமணக்கு)

இந்த மூன்றையும் நன்கு அறைத்து பருக்கள், கரும்புள்ளிகள், கொப்புளங்கள் மேல் தடவிட வேண்டும். முதல் முறையிலேயே பெரும் மாற்றம் காண்பீர்கள். முகத்தில் இவற்றின் அடையாளம் மறையும் வரை தடவலாம். இப்படி செய்யும்போது சிறிதளவு தலையின் உச்சியிலும் தடவினால் உடல் சூடு குறையும்.

மஞ்சள் கலந்துள்ளதால் முடி உதிர்வு ஏற்படும் என்ற எண்ணம் வேண்டாம். இதில் கொட்டைமுத்து (ஆமணக்கு) சேர்ந்திருப்பதால் தலைமுடிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பிரச்சனை நீங்கி முகம் பொலிவு பெரும்.

வேப்பிலை

வேப்பிலையில் உள்ள நிம்பின், நிம்பினென்,நிமான்டியல் மற்றும் இதர பொருட்களான ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிரிப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிரிப்பு பண்புகள் அடங்கியுள்ளன. இரசாயனம் சேர்க்காத இயற்கை கிருமி நாசினியாகும். சித்த மருத்துவத்தில் நோய்களை குணப்படுத்த அதிகளவில் பயன்படுத்தபடுகிறது.

மஞ்சள்

மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். ஆன்டிசெப்டிக் மருந்தாகவும் பயன்படுத்தபடுகிறது. ஆயுர்வேதா, பாரம்பரிய சீன மருத்துவம் எனப் பல மருத்துவ முறைகளில் மஞ்சள் உபயோகிக்கப்பட்டிருக்கிறது.மஞ்சளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் E, நியாசின், வைட்டமின் C, பொட்டாசியம், தாமிரம் (காப்பர்), இரும்பு, கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் (ஜிங்க்) போன்ற ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், அது பல்வேறு வகைகளில் உடலுக்கு நன்மையளிக்கிறது.

கொட்டைமுத்து

இதன் இலை, வேர், எண்ணெய் அனைத்தும் ஆயுர்வேத வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது உடலில் உள்ள விஷத்தன்மையை வெளிப்படுத்த உதவுகிறது. இதிலிருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெய்  யுனானி மருத்வர்கள் மிகச் சிறந்த மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

https://tamil.krishijagran.com/health-lifestyle/tumeric-a-organic-medicine-health-benefits/

K.Sakthipriya
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)