Krishi Jagran Tamil
Menu Close Menu

புற்றுநோயை எதிர்த்து போராடும் மஞ்சள் தூள் நன்மைகள்

Friday, 14 June 2019 06:05 PM

மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். ஆன்டிசெப்டிக் மருந்தாகவும் பயன்படுத்தபடுகிறது.  உடலில் வெட்டு காயங்கள், தீக்காயங்கள், மற்றும் புண்களில் மஞ்சள் சிறந்த மருந்தாக உபயோகப்படுத்தபடுகிறது. ஆயுர்வேதா, பாரம்பரிய சீன மருத்துவம் எனப் பல மருத்துவ முறைகளில் மஞ்சள் உபயோகிக்கப்பட்டிருக்கிறது.

மஞ்சளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் E, நியாசின், வைட்டமின் C, பொட்டாசியம், தாமிரம் (காப்பர்), இரும்பு, கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் (ஜிங்க்) போன்ற ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், அது பல்வேறு வகைகளில் உடலுக்கு நன்மையளிக்கிறது.

மஞ்சளின் தூள் நன்மைகள்

1) உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை மஞ்சளுக்கு உண்டு.

2) மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மஞ்சளைப் பயன்படுத்தலாம். அதன் தொடர்பில் நடந்த ஆய்வில் 60 பேர் சோதிக்கப்பட்டனர். அதில் மஞ்சளை உட்கொண்டோரின் மன அழுத்தம் வெகுவாகக் குறைந்திருந்ததாகத் தெரியவந்தது.

3) முகப்பருக்கள்,  கொப்பளங்கள், இவைகளை போக்க மஞ்சள் சிறந்தது.

4)  பாலில் மஞ்சளை சேர்த்து குடித்து வந்தால் உடல் இரதம் சுத்தமாவதோடு இதய நோயை கட்டுப்படுத்துகிறது.

5)  முட்டையும் ,மஞ்சளும் நல்ல சூடு பாலில் சேர்த்து குடித்து வந்தால் நெஞ்சு சளி, இரும்பல், விரைவில் குணமாகும்.

6) தினமும் முகத்திற்கு மஞ்சளுடன் சிறிது கடலை மாவு மற்றும் பால் ஆடை சேர்த்து தடவி வந்தால் முகம் பள பளப்பதோடு முகத்தில் கருமை மற்றும் காயங்கள் நீங்கிவிடும்.

7) மஞ்சளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்குக்ம் தன்மை உண்டு.  

8) தினமும் மஞ்சளை உணவில் பயன் படுத்தி வந்தால் நீரிழிவு பிரச்சனை எளிதில் குணமாகி விடும்.

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN 

tumeric organic medicine antiseptic மஞ்சள் கிருமி நாசினி

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

CopyRight - 2019 Krishi Jagran Media Group. All Rights Reserved.