Health & Lifestyle

Tuesday, 29 June 2021 04:07 PM , by: KJ Staff

Narthangai

உடல் வெப்பம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் ஏற்படும் வெப்பம் தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.மேலும் இதனால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழத்தில் இருந்து எடுக்கப்படும் பழச்சாற்றை மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலால் ஏற்படும் தாக் கம் குறையும்.

பித்தம் அதிகரிக்கும் போது ஈரல் பாதிக்கப்படும் மேலும் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்களை  ஏற்படுகின்றன. இந்த பித்தம் அதிகரிக்கும் பொழுது தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு அருந்தினால் எளிதாக சுகப்பிரசவம் நடக்கும்.

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலிமைப்பெறும். இரத்தம் மாசடையும்போது நமது இரத்தத்தில்  உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம்  சுத்தமடையும்.

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக கருதப்படுகிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌ய் நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண்  பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம். இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து  ‌தினமு‌ம் ஒரு து‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வயிற்றில் ஏற்படும் புண்கள் குணமாகு‌ம்.

மேலும் படிக்க

உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நன்மை தரும் கொலுமிச்சை பழம்!

உடலில் நீர் சத்து குறைபாடு: காரணம், அறிகுறிகள், சிகிச்சை, பாதுகாப்பு

பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)