1. வாழ்வும் நலமும்

உடலில் நீர் சத்து குறைபாடு: காரணம், அறிகுறிகள், சிகிச்சை, பாதுகாப்பு

KJ Staff
KJ Staff

Credit: Safety

உடலில் நீர் தன்மை குறைந்து விட்டால் அதை நாம் டீஹைடிரேஷன் (dehydration) என்கிறோம்.  உடலுக்கு தேவையான தண்ணீர் குறைந்து விட்டால் நம்மால் சாதாரணமாக செயல்பட முடியாது. 

காரணங்கள் (Reasons)

உடலில் இருந்து நீர் வெளிவருவது சாதாரணமான விஷயம் தான். நம் உடலில் இருந்து வியர்வை, சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது, கண்களில் இருந்து கண்ணீர், இவ்வகையில் நீர் வெளியேறுகிறது. சிலர் நீர் குறைபாட்டை சமப்படுத்த அடிக்கடி  நீர் அருந்துவது, நீர் அதிகம் உள்ள உணவை சாப்பிடுவது, எனர்ஜி ட்ரிங்க் குடிப்பது போன்ற பழக்கத்தை செய்வார்கள். இப்படி உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு அதற்கேற்ப நீங்க  தண்ணீர் அல்லது உணவு எடுத்துக்கொள்ள வில்லை என்றால் உடலில் நீர் வறட்சி அதிகமாக ஏற்பட்டு விடும் (dehydration).

 • இந்த காரணங்களால் மனிதனின் உடலில் இருந்து நீர் வெளியேறுகிறது:

 • காய்ச்சல்

 • வாந்தி

 • வயிற்றுப்போக்கு

 • அதிக வியர்வை

 • மற்றும்  அடிக்கடி சிறுநீர் கழித்தல் (நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு அடிக்கடி ஏற்படும்)

அறிகுறிகள் (Symptoms)

சாதாரண டீஹைடிரேஷனுக்கான அறிகுறிகள்:

 • அதிக தாகம் மற்றும் தொண்டை வறண்டு போவது

 • தலை வலி

 • சிறுநீர் மஞ்சளாக போவது

 • சிறுநீர் கழிப்பதில் குறைபாடு

 • சரும வறட்சி

 • சருமத்தில் வறட்சி காரணமாக வெடிப்புகள்

அதிகமானால் அறிகுறிகள் (Heavy Symptoms)

 • சிறுநீர் மஞ்சளாக போவது /சிறுநீர் கழிப்பதில் குறைபாடு

 • வேகமாக மூச்சு வாங்குவது

 • வேகமான இதயத்துடிப்பு

 • சன்மான கண்கள்

 • சத்து குறைபாடு, தூக்கமின்மை, எரிச்சல்

 • மயக்கம்

குழந்தைகளின் டீஹைடிரேஷனுக்கான அறிகுறிகள் பெரியவர்களை விட  சிறிது வேறுபாடு கொண்டது :

 • வாயி மற்றும் நாக்கு வறட்சி

 • அழுகும் போது கண்ணில் தண்ணீர் வராதது

 • சன்மான கண்கள் மற்றும் கன்னங்கள்

 • சத்து குறைபாடு மற்றும் ஓய்வின்மை

மேலும் இது குறிப்பிடத்தக்கதாகும் அதிக டீஹைடிரேஷன் ஏற்பட்டால் மருத்துவரின் உடனடி ஆலோசனை பெறுவது நல்லது.

Credit : safety

யாருக்கெல்லாம் ஆபத்து?

 • கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் வயிறுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படும் போது நிறைய நீர் வெளியேறுகிறது. மற்றும் கைக்குழந்தைகளால் தாகம் எடுப்பதை கூற முடியாது இதனை பெற்றோர்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 • முதியவர்களுக்கும் உடலில் நீர் தன்மை குறைவாக இருக்கும், மேலும் தாகம் எடுப்பதை அவர்களால் உடனடியாக உணர முடியாது.

 • காய்ச்சல் மற்றும் தொண்டை வழியால் உடல் நிலை சேரி இல்லாதவர்கள், இதனால் உணவு மற்றும் தண்ணீர் எடுத்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.

 • நீரிழிவு இருப்பவர்கள், இவர்களுக்கு சிறுநீர் கழித்தல் அடிக்கடி ஏற்படும்.

 • அதிக சூடான மற்றும் வெயிலில் வேலை பார்ப்பவர்களுக்கு தடுக்க முடியாத அலுவுக்கு வியர்வை ஏற்படும். இதனால் வேகமாக நீர் வறட்சி உண்டாக வாய்ப்புண்டு.

நோய் கண்டறிதல் (Diagnosis)

அதிக இதயத்துடிப்பு, அதிக வியர்வை ஏற்படுவது, காய்ச்சல், இரத்த அழுத்தம் குறைவு, இவையெல்லாம் டீஹைடிரேஷனுக்கான (Dehydration) அறிகுறிகளாக கருதப்படுகிறது.

இரத்த பரிசோதனை எடுப்பதனால் சிறுநீரகம் சரியாக செயல்படுகிறதா மற்றும் சிறுநீர் பரிசோதனை எடுப்பதால் நீர் வறட்சி ஏற்பட்டிருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் டீஹைடிரேஷன் ஏற்பட்டுள்ள உடலில் சிறுநீர் மஞ்சளாக இருக்கும் மற்றும் குறிப்பிட்ட கலவைகளையே கொண்டிருக்கும் இதனை கீற்றோன்கள்  என்பார்கள்.

குழந்தைகளின் டீஹைடிரேஷனுக்கான அறிகுறிகளை கண்டறிய மருத்துவர் குழந்தையின் மண்டையில் பழுப்பு மென்மையான இடம் இருக்கிறதா என்றும் மற்றும், அதிக வியர்வை, சில தசை குறளுக்கான காரணம் இருப்பதை பரிசோதிப்பர்.

Credit : Safety

சிகிச்சை (Treatment)

சிறந்த  டீஹைடிரேஷனுக்கான (Dehydration) சிகிச்சை அடிக்கடி  தண்ணீர்  குடிப்பது. தண்ணீர்,  இளநீர்,  குளிர் பானம், போன்ற தண்ணீர் நிறைந்துள்ளதை எடுத்துக்கொளவது உடலில் நீர் தன்மையை சமப்படுத்திக்கொண்டே இருக்கும். மேலும் டீஹைடிரேஷன் இருப்பவர்கள் டி, காபி, சோடா அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

பாதுகாப்பு (Safety)

பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பே பாதுகாப்பு செய்வது நல்லது. அதிக தண்ணீர் குடிப்பது , நீர் சத்து அதிகம் உள்ள உணவு எடுத்துக்கொளவது, தர்பூசணி, வெள்ளரிக்காய், போன்றவை நல்லதாகும். மேலும் வெயிலில் அதிகம் வேலை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். முதியவர்களும், குழந்தைகளும் மிக ஜாக்கிரதையா இருக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு சரியான அளவு நீர் உள்ளதா என்று பார்த்து பெற்றோர்கள் கவனம் கொள்ள வேண்டும்.

இந்த கோடைகாலத்தில் நீங்கள் உங்கள் உடலை டீஹைடிரேஷன் (Dehydration) ஆவதில் இருந்து பாதுகாத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறோம்!!!!!

 

மேலும் படிக்க

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கசப்புத் தன்மையில்லாத பழுபாகற்காய்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குளிர்கால உணவுகள்! நீங்களும் சாப்பிடுங்க!

உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் மூலிகை குணம் வாய்ந்த வெந்தயத்தின் பயன்கள்!

English Summary: Dehydration: , Symptoms, Causes, Prevention and Treatment

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.