இதழ்களை விரித்து மலரும், மலர்களைக் காணும்போது உள்ளத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் மலர்ச்சியும் உருவாகும்.
பரிசுத்தமான மலர் (Holy flower)
அந்த வகையில் மலர்களின் மகாராணி என்றால், அது தாமரையாகத்தான் இருக்கும். பரிசுத்தத்தன்மை காரணமாகவே இவை தெய்வங்களின் இஷ்ட மலராகவும் திகழ்கின்றன.
அதுமட்டுமல்ல, கோயில்களுக்குக் கொண்டுசென்றால், கடவுள்களுக்கு மணிமகுடமாக மாறி நம்மை மயக்கும் மாயம் கொண்டவை தாமரைகள்.
பூஜைக்கு உகந்தது (Ideal for worship)
அதனால்தான் அவை தூய்மையின் அங்கீகாரமாகக் கருதப்படுவதுடன், பூஜைகளிலும் தவறாமல் இடம்பிடிக்கின்றன. இத்தகைய சிறப்பு அம்சம் பொருந்திய தாமரை பூஜைக்கு மட்டுமல்ல, அழகுக்கு, நறுமணத்திற்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்திற்கு என இன்று பல வகைகளில் நமக்கு உதவுகிறது.
மலர் சிகிச்சை (Flower treatment)
இந்தியாவில் உள்ள குடும்பங்களில் பல குடும்பங்கள் தங்கள் வருமானத்தின் 25 சதவீதத்தை மருத்து சிகிச்சை மற்றும் உடல்நலத்திற்குமே செலவிடுகின்றனர். சாமானியர்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் மருத்துவச் சிகிச்சையின் செலவைக் குறைக்க மலர் சிகிச்சை ஒரு வழியாகும்.
தாமரை சிகிச்சை (Lotus treatment)
பல மலர்கள் மலர்சிச்சைக்கு உதவினாலும், அதில் முக்கியமான மலர் என்றால் அது தாமரைதான். தாமரையைப் பொறுத்தவரை, அதன் விதைகள், இலைகள், தண்டுகள், வேர்கள், மலர்கள் என அனைத்துமே மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன.
தாமரையின் மருத்துவ நன்மைகள் (Medicinal benefits of lotus)
கருப்பை பிரச்னை (Uterine problem)
கருப்பையில் உதிரப்போக்கு ஏற்பட்டால் தாமரையை உட்கொள்வது நல்லது. இது மட்டுமல்ல மகப்பேறு காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு பிரச்னைக்கும் தாமரை நல்லத் தீர்வாகும்.
ஆண்மைத்தன்மை (Masculinity)
உலர்த்திய தாமரை இலைகளைச் சாப்பிடுவதும், தாமரை இதழ்களைச் சுடுதண்ணீரில் போட்டு வேகவைத்துச் சாப்பிடுவதும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
கண் கோளாறு நீங்க (You get rid of eye disorder)
கண் நோய்கள் நீங்க தாமரையில் இருந்து எடுக்கப்படும் தேன், சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தாமரையின் தேன் பல மருந்துகளுக்கு மூலப்பொருளதாகத் திகழ்கிறது.
உடல் நாற்றத்தைப் போக்கும் (Body odor will go away)
உடல் நாற்றத்தை நீக்க, தாமரையின் உலர்ந்த இதழ்கள் மற்றும், ரோஜாவின் இதழ்கள் கலவையை உடலில் தடவ வேண்டும். இது உடலைச் சூடாக வைத்திருப்பதுடன், வியர்வையில் இருந்து விடுபட உதவுகிறது.
உடல் வலிமை பெற (Gain physical strength)
உலர்ந்த தாமரை இதழ்கள் கலவை மற்றும் பாலை, தலா ஒரு டீ ஸ்பூன் என்ற அளவில் கலந்து சாப்பிடுவது, உடலுக்கு வலிமை தரும்.
சருமப் பராமரிப்பு (Skin care)
சருமத்தில் ஏற்படும் கீறல்களைப் போக்க, தாமரை, பெரிய நெல்லிக்காய், சந்தனம் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தலாம்.
மூலநோய்க்கு (For hemorrhoids)
தாமரை சாறு என்பது பெண்களுக்கு மூல நோய் மற்றும் நீரிழப்புக்கு ஒரு தீர்வாகும்.
தலைவலி நீங்க (Get rid of the headache)
தாமரை இதழ்கள் மற்றும் பெரிய நெல்லியாய்த் தூளைக் கலந்து தலையில் தேய்த்தால், தலைவலி தீரும்.
தாமரை விதைகள் (Lotus seeds)
தாமரை விதைகளை குறிப்பிட்ட நேரம், வெந்நீரில் ஊற வைக்கவும். பிறகு தாமரை விதைப் பொடி மற்றும் சர்க்கரையுடன் சேர்ந்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.
புற்றுநோய் (Cancer)
தாமரையில் உள்ள neferine என்ற ஆல்கலாய்டு புற்றுநோய்க்கு எதிராக வினை புரியக்கூடியது என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியளிக்கின்றனர்.
இலைகளின் மருத்துவப் பயன்பாடு (Medicinal use of the leaves)
சீன நாட்டுப்புற மருத்துவத்தின் படி, மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்த தாமரை இலைகள் மற்றும் வேர்களை தண்ணீரில் கொதிக்க வைத்துப் பருகலாம்.
முகப்பருக்கள் நீங்க (acne)
தாமலை இலைகள் மற்றும் பச்சைத் தேயிலைகளை அரைத்து, முகத்தில் பூசினால், முகப்பருக்கள் நீங்கும்.
தலைவலி நீங்க (Get rid of the headache)
தாமரை இலைகளை நன்கு கசக்கி, கூந்தலின் மயிர்க்கால்களில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.
மேலும் படிக்க...
பொங்கலுக்கு இனிப்பு சேர்கும் வெல்லம்! தயாரிப்பு பணிகள் மும்முரம்!!
ஈரோட்டில் ஏல முறையில் நாட்டு சர்க்கரை மற்றும் பூக்கள் விற்பனை
சர்க்கரை நோயை நினைத்து கவலையா? இதோ உங்களுக்கான சிறப்பான தீர்வு பன்னீர் பூ!