Health & Lifestyle

Friday, 17 September 2021 04:54 PM , by: T. Vigneshwaran

Medicinal uses of Nochi leaf

நொச்சி தாவரத்தில் இலைகள் மிகவும் அவசியமானவை. இதில் கருநொச்சி, நீலநொச்சி வெண்ணொச்சி என்று பல வகைகள் உள்ளன. 

கீல் வாதம், முக வாதம் போன்ற கடுமையான வாத நோய்கள் மண்டைக் குடைச்சல் ஆகியவற்றிற்குச் செய்யப்பபடும் மருந்துகளில் கருநொச்சி சிறப்பாக கருதப்படுகிறது.

கால் வீக்கத்தை குறைக்க கரு நொச்சி இலைகளை அரைத்து பற்றுப் போடும் முறை தற்போதும் கிராமங்களில் செய்யப்படுகிறது.  இயற்கை மருத்துவத்தில் நொச்சி அதிகளவில் சேர்க்கப்படுகிறது. மூட்டுவலியை, உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க, சருமப் பிரச்சனைகளுக்கு நொச்சி பயன்பாடு நிவாரணியாக வேலை செய்கிறது.

குடலில் ஏற்படும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கும் திறன் கொண்டது நொச்சி இலை, மாதவிடாய், கர்ப்பகாலப் பிரச்சனைகள், சினைப்பை நீர்க்கட்டிகள் போன்றவற்றுக்கும் நிவாரணம் வழங்குகிறது.

நொச்சிச் செடி இருக்கும் இடங்களில் நோய்களைப் பரப்பும் கொசுக்களும் பூச்சிகளும் இருக்காது. நொச்சி துவர்ப்பு சுவை கொண்டது. வெப்பத் தன்மையுடையதாக இருந்தாலும், அசதியைத் தணிக்கும், சிறுநீரைப் பெருக்கும், காய்ச்சலைப் போக்கும், ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும்.

ஒரு தேக்கரண்டி நொச்சி இலை சாற்றில் 1 கிராம் மிளகுத் தூள் சிறிதளவு, நெய் சேர்த்து, காலை மாலை வேளைகளில் சாப்பிட்டுவந்தால் மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும்.

ஒரு பிடி நொச்சி இலைகளை 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து நீராவி பிடித்தால், தலை பாரம் குறைந்து விடும்.

மேலும் படிக்க:

உடல் எடையை அதிகரிக்க இந்த 5 உணவுகளை தினசரி உணவில் சேர்க்கவும்!

மஞ்சள் பல் பிரச்சனைக்கான சக்தி நிறைந்த வீட்டு வைத்தியம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)