Health & Lifestyle

Saturday, 11 September 2021 08:20 PM , by: Elavarse Sivakumar

தமிழ்நாட்டில், செப்12ம் தேதியான இன்று, தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதற்கு முடிவு கட்டும் வகையில், தமிழகத்தில் இன்று மொ தடுப்பூசி முகயம் நடத்தப்டுகிறது.

நாட்டில், கொரோனா வைரஸின் 2-வதுது அலை கட்டுக்குள் இருந்தாலும், இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை.

முதல் அலையைக் காட்டிலும் 2-வது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், குறிப்பாகத் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், தொற்று பாதிப்பு 30,000 என்ற நிலையிலே இருந்து வருகிறது.

மத்திய அரசு அறிவுறுத்தல் (Federal Government Instruction)

நாட்டின் மொத்த பாதிப்பில் பெரும்பாலான தொற்று பாதிப்புகள் கேரளாவில் தான் பதிவாகின்றன. இந்நிலையில், மூன்றாம் அலை குறித்த அச்சமும் உள்ளதால், மத்திய அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரபடுத்தி, கொரோனா பரவல் (Coronavirus) அதிகமாகாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில், இன்று மெகாத் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில், 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள் (Special camps)

ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் என மக்கள் வசதிக்கேற்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படுகிறது.

மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசிகள் போட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு, 18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள் இந்த முகாம்­க­ளைப் பயன்­ப­டுத்­தித் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று சுகா­தா­ரத்­துறை செய­லா­ளர் டாக்­டர் ராதா­கி­ருஷ்­ணன் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

கொரோனா பாதிப்பு (Corona vulnerability)

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 1,631 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,30,592 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 186 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

வருமான வரி தாக்கல் செய்வதில் தொடரும் சிக்கல்: காலக்கெடு நீட்டிப்பு!

தவறவிட்டத் தாலி- விவசாயியின் நேர்மையால் நடந்தது திருமணம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)