1. செய்திகள்

தவறவிட்டத் தாலி- விவசாயியின் நேர்மையால் நடந்தது திருமணம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Missed Tali- Marriage happened by the honesty of a farmer!

Credit : Dinamlar

தமிழகத்தில் , தவறவிட்ட தாலியைக் கண்டெடுத்து ஒப்படைத்த நேர்மையான விவசாயியால், நின்றுபோகவிருந்த திருமணம் நடைபெற்றது, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

புதுக்கோட்டை மாவட்டம், மாலையிடு பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி, 40. இவரது உறவினருக்கு நச்சாந்துப்பட்டியில் திருமணம் நடைபெறவிருந்தது.
இதற்காக, ரேணுகாதேவி ஏழு கிராம் தாலி, 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை, தன் கைப்பையில் வைத்துக்கொண்டு, இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில்  சென்றுள்ளார்.

தவறி விழுந்தத் தாலி (Missed Tali)

மலையலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் உள்ள வேகத்தடையில் சென்றபோது, வேகத்தடையில் ஸ்கூட்டி ஏறி இறங்கியதில், தாலி, பணம் இருந்த கைப்பை கீழே விழுந்து விட்டது. இதை ரேணுகாதேவி கவனிக்காமல் சென்று விட்டார். வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, கைப்பையைத் தொலைத்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீஸில் ஒப்படைப்பு (Handing over to the police)

இதற்கிடையே, மலையலிங்புரத்தைச் சேர்ந்த விவசாயி திராவிடமணி, 46 என்பவர், அவ்வழியாக வந்த போது, கீழே கிடந்த கைப்பையைப் பார்த்துள்ளார்.

அதில் தாலி, பணம் இருந்ததால், திருமணத்துக்காக வாங்கிச் சென்றது தவறி விழுந்துள்ளது என்பதை புரிந்து கொண்டார். உடனடியாக நமணசமுத்திரம் போலீசில் தெரிவித்து, அந்தக் கைப்பையை ஒப்படைத்தார்.

நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் தான், கைப்பையைத் தவற விட்டிருக்க வேண்டும் என்று கருதினர்.
அதே வேளையில் சிவபுரம் பகுதியில், மூவர் சாலையோரம் பதற்றத்துடன் எதையோ தேடிக் கொண்டிருப்பதை பார்த்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, தவறவிட்ட தாலி, பணம் அவர்களுடையது என, தெரியவந்தது.

நாணயமான விவசாயி

இதையடுத்து தாலி, பணத்தை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதனால் ரேணுகாதேவியின் உறவினர் திருமணம் எவ்வித பிரச்னையும் இன்றி நடந்தது. இதையடுத்து போலீசாரும், திருமண வீட்டாரும் விவசாயி திராவிடமணியை வெகுவாகப் பாராட்டினர்.

மற்றவர்களுக்கு உதாரணம் (Example for others)

சாலையில் கிடந்த பொருளை, நாம் வைத்துக்கொள்ளலாம் என நினைக்காமல், போலீஸில் ஒப்படைத்த விவசாயியின் நாணயம் மற்றவர்களுக்கு மிகச் சிறந்த உதாரணம்.

மேலும் படிக்க...

தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு மானியம்!

சும்மா டக்குன்னு ஏறும் சரக்கு, குடிக்க வேண்டாம்- நுகர்ந்தாலே போதும்!

English Summary: Missed Tali- Marriage happened by the honesty of a farmer!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.