Credit: Skin care by Alona
நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள பல்வேறு விஷயங்களை வாரி வழங்கியுள்ளது இயற்கை. ஆனால், அவற்றின் உன்னதத்தை உணர்ந்துகொள்ளாமல், ஆன்லைனில் ஆர்டர் பண்ணும் உணவு, ரெடிமேடு பரோட்டா, பாட்டில் பானங்கள் போன்றவற்றில் நாம் சிக்குண்டதாலேயே, பல்வேறு நோய்களும் நம்மைப் பதம்பார்க்கத் தொடங்கிவிட்டன.
இதனால் நோயிற்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைகளை ஏறி இறங்கி, சேர்த்து வைத்த சொத்தைக் கரைத்தாலும், பிரச்னை தீர்ந்தபாடில்லை.
எனவே நோய்களில் இருந்து விடுபட, பாரம்பரிய உணவு முறைகளுக்கு திரும்பவேண்டியது இன்றையக் கட்டாயம். அந்த வகையில், பெரும்பாலானோரை பாதித்துள்ள நோய்களான, உயர் ரத்த அழுத்தம், நீரழிவுநோய் நோய் போன்றவற்றில் இருந்து விடுபட சில உணவுகளும், பானங்களும் அத்தியாவசியமே.
பாரம்பரிய பானம்
அப்படி பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கியமான ஆரோக்கிய பானம்தான் இளநீர்.
நார்ச்சத்து, மாவுச்சத்து, சோடியம், பொட்டாஷியம், மெக்னீஷியம் என பல்வேறு பொக்கிஷங்களைத் தன்னுள் புதைத்து வைத்துள்ள பானம். உங்கள் நாளை இளநீரோடு துவங்குவது உடலுக்கு மட்டுமல்லாமல், மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். இதில் 94 சதவீதம் தண்ணீரும், சிறிதளவு கொழுப்பும் உள்ளது.
குறிப்பாக விளையாட்டு வீரர்கள் தங்கள் சக்தியைப் பெருக்கிக்கொள்ளப் பயன்படுத்தக்கூடிய ஆரோக்கிய பானம் இது. குறைந்த கலோரிகளையும் (Calories), அதிக என்சைம்களையும் (Enzymes), தாதுக்களையும் கொண்டது இளநீர்.
காலையில் நடைபயிற்சிக்கு செல்லும்போது, பகல் மற்றும் இரவு வேளைகள் என எப்போது வேண்டுமானாலும், இளநீரைப் பருகலாம். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய மிகச்சிறந்த பானமாகும். குறிப்பாக கோடை காலங்களில் அனுதினமும் எடுத்துக்கொள்வது நல்லது.
image credit : Just dial
இளநீரின் மருத்துவப் பயன்கள்
உடல் எடையைக் குறைக்க (Weight Loss)
இளநீரைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதால், அதில் உள்ள குறைந்த கலோரிகள், செர்மானத்தை சீராக்கி, உடல் எடைக் குறைப்பு வழிவகுக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 முறை இளநீரை எடுத்துக்கொள்ளலாம்.
உயர் ரத்த அழுத்தம் (Hypertension)
இளநீரில் உள்ள மெக்னீஷியம், பொட்டாஷியம், வைட்டமின் C ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பெரிதும் துணை புரிகின்றன.
ஆன்டி-ஆக்ஸிடன்ட் (Anti-oxidant)
இளமையைக் தக்க வைத்துக்கொள்ள இளநீரில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் தவறாமல் உதவுகின்றன. முதுமையைத் தள்ளிப்போட விரும்புபவர்கள் பாக்கெட் மற்றும் பாட்டில் பானங்களுக்கு குட்பை சொல்லிவிட்டு, தினமும் இளநீர் பருக ஆரம்பிக்கலாம்.
Credit: Eatsmart
சிறுநீரக கல் பிரச்னை (Kidney Stone)
போதுமான அளவு தண்ணீரைக் குடிக்காமல் விடுவதாலேயே சிறுநீரகத்தில் கல் உருவாகும் பிரச்னை ஏற்படுகிறது. சிறுநீரகக் கல் பிரச்னையில் இருந்து விடுபட அதிகளவு தண்ணீர் பருக வேண்டும். அதில், தண்ணீரை விட சிறந்தது எதுவென்றால், இளநீர் தான் எனக் கூறுகின்றன சில ஆராய்ச்சி முடிவுகள்.
இதய ஆரோக்கியம் (Heart Health)
இளநீரைத் தொடர்ந்து பருகுவது, இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
எனவே இனியாவது இளநீரைத் தொடர்ந்து பருகுவோம். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம்.
மேலும் படிக்க...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேநீர்கள்- உங்கள் கவனத்திற்கு!
அடிக்கடி சோர்வடைகிறீர்களா? வைட்டமின் D குறைபாடாக இருக்கலாம்!