பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 5 August, 2019 6:15 PM IST

வாக்கிங் போன வெயிட் குறைஞ்சிடும்......

இனி நா தினமு வாக்கிங் போவ......

என்று வாய்வார்த்தை மட்டும் தான் நடக்கிறது. அதற்கான முயற்சி கேள்விக்கு குறியாகவே இருக்கிறது?  தற்போதைய சூழலில் நம் உடலுக்கு எவ்வித வேலையும் கொடுக்காமல் டெக்னாலஜி என்ற பெயரில் பல்வேறு உபகரணங்களையும், மின்சாதன இயந்திரங்களையும் பயன்படுத்தி உடலுக்கு அசைவும், பயிற்சியும் அளிக்காமல் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதனால் ஏற்படும் பாதிப்பை நினைப்பதில்லை. உடலுக்கு நோய்களோ, அல்லது ஏதேனும் சுகாதாரப் பிரச்சனை ஏற்பட்டால் தான் அதை பற்றி யோசிக்கவே ஆரம்பிக்கிறோம்.

அதிக உழைப்பின்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஒரே வழி தினமும் ஒரு மணி நேரம், வேண்டாம் ஒரு அரை மணி நேரமாவது நடை பயிற்சி மேற்கொள்வது தான். ஒரு நாளைக்கு முடிந்த அளவு அரை மணி நேரமாவது நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நோயாளிகளானாலும் சரி, இளைஞர்களானாலும் சரி, முதியவர்களானாலும் சரி, அனைத்து வயதினரும் நடை பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

நடைப்பயிற்சி செய்ய உகந்த நேரம்

பொதுவாக நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது. காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, தண்ணீர் அருந்திவிட்டு, இறுக்கமில்லாத ஆடையை அணித்துகொண்டு நடப்பதுதான் நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்றவுடன் சிறிது தூரம் நடப்பது அல்ல. குறைந்தது 2 கி. மீ ஆவது நடக்க வேண்டும். கடற்கரையிலோ, சாலை ஓரங்களிலோ அல்லது பூங்காக்களைச் சுற்றியோ நடக்கலாம்.

அதிகாலையில் செய்யும் நடைப்பயிற்சியால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனனும் வேலை செய்ய முடியும்.   நடக்கும்போது பேசிக்கொண்டோ அரட்டை அடித்துக்கொண்டோ பாட்டு கேட்டுக் கொண்டோ நடக்கக் கூடாது. மெதுவாகவும், அமைதியாகவும் கைகளை நன்கு வீசி மூச்சுக்காற்றை நன்கு உள்வாங்கி வெளியிட்டு நடக்க வேண்டும். நடை ஒரே சீராக இருக்க வேண்டும். நடந்து வந்தவுடன் சிறிது நேரம் குனிந்து, நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் அசைத்து உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.

நடை பயிற்சியின் நன்மைகள்

வாக்கிங் செல்வதால் நரம்புகளுக்கும், சதைகளுக்கு நல்ல அசைவு உண்டாகி ரத்த ஓட்டம் சீராக நடைபெறுகிறது.

மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், குறைகிறது.

சுறு சுறுப்பு உண்டாகிறது. 

சுவாசப் பிரச்சனை, செரிமானப் பிரச்சனை சீராகிறது.

முகத்தில் பொலிவு, புத்துணர்ச்சி உண்டாகிறது.

உடல் எடை குறையும்.

எலும்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும்.

சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

உடலின் உள்ளுறுப்புகள் பலம் பெறும்.

தசைகளுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும்.

முக்கியமாக நீங்கள்

நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள்

நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் கண்டிப்பாக தினமும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சர்க்கரை என்பது நோயல்ல. இது ஒரு வகையான ஆரோக்கிய குறைபாடு. இக்குறைபாட்டை நாம் தினமும் நடை பயிற்சி மேற்கொண்டே சரி செய்து விடலாம். எனவே நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் கண்டிப்பாக நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளவர்கள் வாக்கிங் செல்வது அவர்களின் இதயத்திற்கும், மனதிற்கும் மிகச் சிறந்தது. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு 100 சதவீதம் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. இதனால் நீங்கள் தினமும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

மூச்சு பிரச்சனை

மூச்சு பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக, கட்டாயமாக நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடை பயிற்சி மேற்கொள்வதால் இதயம் பலமடைகிறது. மேலும் மூச்சு குழாய் சீராக செயல்படுகிறது.

செரிமானப் பிரச்சனை

செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் நடை பயிற்சி மேற்கொள்வதால் உடல் எடை குறைந்து வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். இதனால் ஜீரண சக்தி அதிகரித்து செரிமானம் சீராகும்.

https://tamil.krishijagran.com/health-lifestyle/basic-tips-to-lead-a-healthy-lifestyle/

https://tamil.krishijagran.com/health-lifestyle/best-time-for-walking/

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: o you know which is the Right time for walking :here are some healthy walking tips
Published on: 05 August 2019, 06:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now