Krishi Jagran Tamil
Menu Close Menu

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உதவும் சில டிப்ஸ்

Monday, 29 April 2019 12:31 PM

ஆரோக்கியமான வாழ்க்கையை நீடித்துக்கொள்வது என்பது அவர் அவர் மேற்கொள்ளும் செயல்களை கொண்டே இருக்கிறது.மற்றும் இதனை ஒப்பிடும் போது நிறைய வேறுபாடுகள் கொண்டதாகும். மேலும். ஆரோக்கியமான வாழ்க்கை என்பது நோயற்ற வாழ்வு, உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பு. மேலும் இது நபருக்கு நபர் வேறுபடுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கையை நீடிக்க சிறந்த உணவு, உடற்பயிற்சி, மற்றும் உடல் கவனிப்பு மிக முக்கியமானதாகும். 

உங்களுக்காக  ஆரோக்கியமான வாழ்க்கையை நீடிக்க சில எளிய முறையில் ஹெல்த்தி டிப்ஸ் :

1.தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முடிந்த அளவு 2 ல் இருந்து 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லதாகும்.

2.காலை, மாலை என இரு நேரமும் ஒரு மணி நேரமாவது நடை பயிற்ச்சி (வாக்கிங்) மேற்கொள்ள வேண்டும். இதனால் உங்கள்  உடல் உறுப்புகளில் நல்ல செயல்பாடு ஏற்பட்டு நரம்புகளுக்கும், சதைகளுக்கு பலம் கிடைக்கும்.

3.நேரத்திற்கு சாப்பாடு உணவு உட்கொள்ளவது. ஒரு நாளில் நாம் மூன்று வேலை சாப்பிடுகிறோம் இதில் காலை 9- 9:30 மணிக்குள் சாப்பிட வேண்டும். மதியம் 1:30 - 2  மணிக்குள் சாப்பிட  வேண்டும். மற்றும் இரவு 7-7:30 மணிக்குள் சாப்பிடும் பழக்கத்தை  ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

4.அளவான சாப்பாடு. நாம் தினமும்  சாப்பிடும் உணவில் அளவான சாப்பாடு இருந்தால் மிகவும் நல்லது. அல்லது காலை, மாலை நன்றாக சாப்பிட்டால் இரவு உணவில் குறைந்த அளவு சாப்பாடு   இருந்தால்  செரிமானம் சீராக  ஏற்படும்.

5.உடற்பயிற்சி , தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புகளுக்கு நல்ல செயல்பாடு  ஏற்பட்டு மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சி கிடைப்பதோடு நல்ல ஆரோகியம் கூடும்.

6.நனமது தினசரி வேலையை நேரத்திற்கு செய்வது. ஒரு நாளைக்கு நாம் செய்யும் வேலையை நாம் மற்ற நாளிலும் அதே நேரத்திற்கு செய்ய வேண்டும்.

7.கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்த உணவை  உட்கொள்வதால் தேவையற்ற கொழுப்பு நம் உடம்பில் ஏற்படுகின்றது. இதனால் உடல் பருமனாகி உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.  முடிந்த அளவு கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்ப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்லதாகும்

8.நாம் உட்கொள்ளும் உணவில் காயிகரிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பயிர்கள் சாப்பிடுவது நல்லது அதிலும் ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அசைவ உணவை இரவில் தவிர்ப்பது உடல் செரிமானத்திற்கு நல்லது.

9.நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் முடிந்த அளவு மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு  ஒரு முறை உடலை பரிசோதித்துக்கொள்வது மிகவும்  நல்லது.

நேரம் நம்மை தேடி வராது, நாம் தான் நமக்காக நேரத்தை எடுத்துக்கொள்ள  வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இந்த டிப்ஸ் மிகவும் பயன் அளிக்கும்.

healthy lifestyle health care tips healthy foods excersice diet regular health checkup eating habbits
English Summary: Basic tips to lead a healthy lifestyle

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. வீட்டுத் தோட்டத்திற்கு இயற்கை உரம் வீட்டிலேயே தயாரிக்கலாம்! எப்படின்னு தெரிஞ்சுகோங்க!
  2. விவசாயிகளுக்கு உதவ விஜய் ரசிகர்கள் எடுத்த அசத்தலான முடிவு - பொதுமக்கள் வரவேற்பு!
  3. உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை வேண்டுகோள்!
  4. சேலம் அருகே கருமந்துறை பண்ணையில் பழம் பதனிடும் நிலையம் அமைப்பு! - ஜாம், ஜூஸ், ஊறுகாய் விற்பனை அமோக வரவேற்பு!!
  5. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., 162 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!!
  6. மக்களே உஷார் : டிச., 2 அதிகனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்!!
  7. குறைந்த செலவில் அதிக விளைச்சல்... நாங்களும் சிறுதானியத்திற்கு மாறிவிட்டோம்!
  8. நிவர் புயலால் உயிரிழந்த மாடுகளுக்கு இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு!
  9. பன்றிகள் தொல்லை...! சேலையில் வேலி கட்டி வயலை பாதுகாக்கும் விவசாயிகள்!
  10. "Delhi Chalo" மேலும் 2 லட்சம் விவசாயிகள் படையெடுப்பு! தீவிரமடையும் போராட்டம்

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.