சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 18 May, 2022 6:21 AM IST

குளிர்ந்த கார்போஹைட்ரேட்டுகள் இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் என்று ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை, முதல் நாள் சமைத்து எஞ்சிய சாதத்தை தண்ணீர் ஊற்றிவைத்துவைட்டு, மறுநாள் சாப்பிடுவது வழக்கம். இதற்கு பழைய சோறு என்று பெயர். இதனைச் சாப்பிடுவதால், நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

ஆய்வு

இந்நிலையில், கடந்த மாதம் ஊட்டச்சத்து மற்றும் நீரிழிவு நோய் குறித்து, ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டது. அதன்படி, புதிதாக சமைக்கப்பட்ட சாதத்திற்கு பதிலாக மீண்டும் சூடுபடுத்தப்பட்ட சாதத்தை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையின் கூர்மையை குறைக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

போஸ்னான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த போலந்து ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று வகை 1 நீரிழிவு நோயாளிகளை ஆய்வு செய்தது. இரண்டு வெவ்வேறு சோதனை உணவை சாப்பிட்ட பிறகு அவர்களின் இரத்த சர்க்கரை அளவை ஒப்பிட்டுப் பார்த்தது.

ஒரு உணவு நீண்ட தானிய வெள்ளை அரிசி (அரிசி சாதம்), சுமார் 46 கிராம் கார்போஹைட்ரேட், உடனடியாக தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டது. மற்றொன்று அரிசி சாதத்தின் அதே பகுதி, ஆனால் 24 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் குளிர்விக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சூடாக்கி பரிமாறப்பட்டது.

பங்கேற்பாளர்கள் குளிரூட்டப்பட்ட சாதத்தை உண்ணும்போது, ​​அவர்களின் இரத்த சர்க்கரை அளவு கணிசமாக நிலையானதாக இருப்பதையும், ஒட்டுமொத்தமாக குறைந்த அதிகரிப்புடன் இருப்பதையும், புதிய அரிசியை உண்பதைக் காட்டிலும் குறைந்த நேரம் உச்சத்தை அடைவதையும் கண்டறிந்தனர்.

எதிர்ப்பு ஸ்டார்ச்

சாதம் போன்ற குளிர்ந்த கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. 

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, எதிர்ப்பு ஸ்டார்ச் எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகை கார்போஹைட்ரேட்யை பழைய சாதம் கொண்டுள்ளது. அதாவது புதிய சாதத்தை விட பழைய அரிசி சாதம் கணிசமாக அதிக எதிர்ப்பு சக்தி கொண்ட மாவுச்சத்தை கொண்டிருந்தது.

மேலும் படிக்க...

மாம்பழத்தில் போலி- கண்டுபிடிக்க என்ன செய்யவேண்டும்?

ஒல்லியான உடல் அமைப்புக்கு - இந்த பால் கைகொடுக்கும்!

English Summary: Old rice to prevent diabetes - a fact that no one knows!
Published on: 16 May 2022, 06:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now