1. வாழ்வும் நலமும்

சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் எலுமிச்சை பானங்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Lemon drinks that protect the kidneys!

நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் தனக்கென தன்னிகரில்லாப் பணியைச் செய்யவே பணிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை அவை அவற்றின் பணிகளைச் செய்யத்தவறும்போதுதான், உடல்நலக்குறைவு எனப்படும் பிரச்னையே ஆரம்பிக்கிறது.

அந்த வகையில், ரத்த நாளங்களில், இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மற்றும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றும் பணியைச் செய்வது சிறுநீரகம். இதன் செயல்பாடு சிறப்பாக இல்லையென்றால், நாம் பல உடல்நல உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும். இதுவே, நமக்கு பிற நோய்கள் வரவும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

அது மட்டுமல்ல, சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு உடலில் உள்ள அழுக்கு மற்றும் திரவங்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுவதாகும். இது தவிர, சிறுநீரகம் மனித உடலில் உப்பு, பொட்டாசியம் மற்றும் அமிலத்தின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. இதனுடன், நமது உடலின் மற்ற பாகங்கள் செயல்படத் தேவையான சில ஹார்மோன்களும் சிறுநீரகங்களிலிருந்து வெளியேறுகின்றன.

ஏனெனில், சில நேரங்களில் இந்த நச்சுகள் சிறுநீரகத்தை சேதப்படுத்தி சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்கின்றன. எனினும், தினமும் ஒரு பானத்தைக் குடிப்பதன் மூலம், உங்களின் இந்த சிறப்பு உறுப்பை சுத்தம் செய்து சிறுநீரக பாதிப்பை தடுக்கலாம். சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் அந்த பானம் எது? அதை எப்போது, ​​எப்படி குடிக்க வேண்டும்? என்பதைப் பற்றித் தகவல் அளித்துள்ளோம்.

ஹார்வர்ட் அறிக்கையின்படி, தினமும் 2 எலுமிச்சை பழச்சாறு குடிப்பதால், சிறுநீர் சிட்ரேட் அதிகரித்து, சிறுநீரகத்தில் உள்ள நச்சுகள் வெளியேறும். அதே சமயம், தினமும் 2 முதல் 2.5 லிட்டர் வரை சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் இந்த பானத்தை காலை மற்றும் மதியம் குடிக்கலாம்.

புதினா+ எலுமிச்சை

ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாறு, புதினா இலைகள் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து குடிக்கலாம்.

மசாலா எலுமிச்சை சோடா

ஒரு கிளாஸில் எலுமிச்சை சாறு, சீரகம்-கொத்தமல்லி தூள், சாட் மசாலா மற்றும் சோடாவை நன்கு கலந்து குடிக்கவும். இப்படி செய்தால் உங்கள் சிறுநீரகத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் ஒரு நல்ல பானம் உங்களுக்கு கிடைக்கும்.

தேங்காய் ஷிகன்ஜி

இந்த ஆரோக்கியமான பானத்தை தயாரிக்க, ஒரு கிளாஸில் இளநீரை விட்டு அதில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.

மேலும் படிக்க...

ஓய்வூதியத் தொகை உயர்வு-மத்திய அரசு நடவடிக்கை!

மூத்த குடிமக்களுக்கு ஏசி ரயிலில் ஓசி பயணம்- அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

English Summary: Lemon drinks that protect the kidneys! Published on: 13 May 2022, 08:59 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.