கடைகளில் கிடைக்கக் கூடிய ஹேர் டை-களைப் பயன்படுத்தினால் முடி குறுகிய நேரத்தில், குறுகிய காலத்திற்கு மட்டும் கருமையாக மாறும். ஆனால், அவற்றில் உள்ள கெமிக்கல்கள் முடியின் வேர்க்கால்களை வலுவிழக்கச் செய்கின்றன. அதாவது, முடி உதிர்வை அதிகமாக்குகின்றன. தலையில் அரிப்புத் தன்மையை அதிகமாக்கிப் பொடுகு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. இவ்வகையான பிரச்சனைகளிலிருந்து விடுபட இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட ஹேர் ஆயிலையும், ஹேர் டை-யையும் பயனபடுத்துவதே சிறந்த தீர்வாக அமையும்.
தேவையான பொருட்கள்
சுத்தமான தேங்காய் எண்ணெய் - 450 மி.லி.
நெல்லிக்காய் பொடி - 100 மி.கிராம்.
ஹேர் டை-செய்முறை
முதலில் ஒரு இரும்புக் கடாய்-ஐ எடுத்துக் கொள்ளவும். 50 மில்லி அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய், 2 டீஸ்பூன் அளவுக்கு நெல்லிக்காய் பொடியைச் சேர்த்து, அடுப்பை மீடியம் ஃப்ளேம்-இல் வைத்து நன்றாக கலந்து விட வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் இந்த நிலையில் நன்றாக கலந்து விட வேண்டும். ஐந்து நிமிடத்திற்கு பிறகு, நெல்லிக்காய் பொடி கலந்த தேங்காய் எண்ணெயை அடுப்பிலிருந்து எடுத்து வேறு பாத்திரத்தில் ஊற்றி நன்கு ஆர வைக்க வேண்டும்.
பயன்படுத்தும் முறை
தலையில் எண்ணெய் எதுவும் அப்ளை செய்யாமல் இந்த நெல்லிக்காய் எண்ணெயை முடியின் வேர்க்கால்கள் மற்றும் முடியின் நுனி வரை அப்ளை செய்ய வேண்டும். ஒரு மணிநேரம் கழித்து மைல்டான ஷாம்பூ-வைப் பயன்படுத்தித் தலைக்குக் குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். இதே போன்று தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நரை முடி, வெள்ளை முடி, செம்பட்டை முடி ஆகியன கருமையான முடியாக மாறும். இது ஒரு இயற்கையான ஹேர்டை ஆகும். இது நிரந்தரமாக நமது முடியைக் கருமையாக மாற்றக்கூடிய ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. அதோடு, வேர்க்கால்களிலிருந்து இனி வளரும் முடிகளும் கருமையானதாக வளருகின்றன.
இதே நெல்லிக்காய் பொடியைப் பயன்படுத்தி ஒரு ரெஹுலர் ஹேராயில்-உம் செய்யலாம். இதையும் அதனோடு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கருமையான முடியைப் பெறலாம்.
ஒரு 400மில்லி அளவுக்கு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டால், 50 மில்லி கிராம் அளவுக்கு நெல்லிக்காய் பொடியை எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் சேர்த்து காய்ச்சி, ஆரவைத்து, வடிக்கட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல தீர்வைப் பெறலாம்.
மேலும் படிக்க