Health & Lifestyle

Tuesday, 18 August 2020 05:16 PM , by: Elavarse Sivakumar

Credit: Deccan Chronicle

கொரோனா உலக அளவில் பெரிய மாற்றங்களை உருவாக்கி வருகிறது. தொழில், வணிகம், கல்வி,  உடல்நலம்  என அத்தனையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி, வேலை உள்ளிட்டவற்றை வீட்டில் இருந்தே செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். .

அதாவது லேப்-டாப் (lap-top) உதவியுடன் ஆசிரியர்கள் நடத்தும் ஆன்லைன்(online) வகுப்புகள்மூலம் மாணவர்கள் பாடம் கற்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்துகின்றன.

வேறு வழி இல்லாமல் குழந்தைகளும் இந்த முறைக்கு பழகி வருகின்றனர். பெற்றோரும் உதவி வருகிறார்கள். ஆன்லைன் கல்வி முறையில் குழந்தைகள் நீண்ட நேரம் டிஜிட்டல் திரைகளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுக் கட்டாயமாகிவிட்டது.  

Credit:EcnScn

ஹெட்ஃபோன்களை காதில் மாட்டிய வண்ணம் இருக்க வேண்டி இருக்கிறது. இதனால் கண்களுக்கும், காதுகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பாதுகாக்க என்ன செய்யலாம்?

மருத்துவர்கள் கொடுத்த அறிவுரைகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

  • காதுகளில் ஹெட்ஃபோன் மாட்டுவதற்கு பதிலாக கணினியுடன் ஸ்பீக்கர்களை (Speakers) இணைத்துப் பயன்படுத்தலாம். அளவான ஒலி அளவை வைக்க வேண்டும். காதுகளுக்குள் செருகிப் பயன்படுத்தும் இயர்ஃபோன்களை தவிர்க்க வேண்டும்.

  • பலர் இருக்கும் இடத்தில் மற்றவர்களுக்கு தொல்லை இல்லாமல் இருப்பதற்காக ஹெட்ஃபோன் பயன்படுத்துவதாக இருந்தால் தரமான ஹெட்ஃபோனை (Head Phone) வாங்கிக் கொடுக்க வேண்டும்.

  • மொபைல் ஃபோன்களில் வகுப்புகளை கவனிப்பது மாணவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். எனவே லேப்டாப்பைப் பயன்படுத்துவது எளிதாக இருக்கும்.

  • தொடர்ச்சியாக முன்று மணி நேரத்துக்கு மேல் நெருக்கத்தில் இருந்து மின்னணுத் திரையை பார்த்துக் கொண்டே இருந்தால் அது கண்களுக்கு கூடுதல் சோர்வை ஏற்படுத்தும்.

Credit: New Indian Express

  • எனவே நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை, பதினைந்து நிமிடங்கள் இடைவெளி எடுத்துக்கொள்வது சிறந்தது.

  • அந்த பதினைந்து நிமிடங்களில் குழந்தைகளை சிறிது தூரம் நடக்கச் செய்யலாம். இது கண்களுக்கும், உடம்புக்கும் உற்சாகம் தரும்.

  • திரைக்கு முன் உட்காருவதிலும் எச்சரிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். நிமிர்ந்து உட்கார வேண்டும். விழிகளில் இருந்து ஒரு அடி தொலைவில் உள்ள மேஜையின் மீது லேப்-டாப்திரை வைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

  • உயரத்தை ஏற்றி இறக்கி சரி செய்து கொள்ளக் கூடிய, எளிதில் நகர்த்துவதற்கு ஏற்ற சுழல்  இருக்கை வசதியாக இருக்கும்.

  • விழிகள் மட்டத்தில் இருந்து 20 டிகிரி கீழ் மட்டத்தில் திரை இருக்க வேண்டும்.

  • ஏசி அறையாக இருந்தால், ஏசி காற்று நேரடியாக குழந்தைகளின் முகத்தில் படும்படி இருக்கக் கூடாது. இது நேரம் ஆக நேரம் ஆக கண்களில் உள்ள ஈரப்பதத்தை குறைத்து விடும்.

  • இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை திரையில் இருந்து விழிகளை அகற்றி, இருபது அடி தொலைவில் உள்ள ஏதாவது ஒரு பொருளை இருபது வினாடிகள் பார்க்க அது கண்களுக்குப் புத்துணர்ச்சி தரும்.

  • பார்க்கும் பொருள் பசுமையான செடியாகவோ அல்லது மரமாகவோ இருப்பது புத்துணர்ச்சியை இன்னும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க...

பொள்ளாச்சி இளநீரே!... இளநீரின் அசத்தல் பயன்கள்!

துரத்தித் துரத்திக் கடிக்கும் அவற்றிடம் சிக்கிக்கொள்கிறீர்களா ?- தப்பித்துக்கொள்ள எளிய வழிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)