1. வாழ்வும் நலமும்

கொசுக்களைக் கடிக்க நீங்க ரெடியா- இது எப்படி இருக்கு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit: Unsplash

மழைக்காலம் தொடங்கிவிட்டது என்றாலே நம் மனதில் ஒரு சந்தோஷம் வந்துவிடுகிறது.

நீ வரும்போது, நான் மறைவேனா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, சாரல் மழையில் நனைய இங்கு யாருக்குதான் ஆசை இல்லை.

ஆனால் அதன் பின்பு, மழைக்காலங்களில் நம் வீடுகளுக்கு அழையா விருந்தாளியாக வந்துவிடுகின்றன இந்த இலவச டாக்டர்கள். அதாவது காசு வாங்காமல் ஊசி போட்டுச செல்லும் இவற்றை வேறு எப்படி கூறுவது என்று கேட்பார்கள் கிராமப்புறங்களில்.
அப்புறம் இந்தக் கொசுக்களை வெளியேற்ற எவ்வளவுதான் முயற்சி மேற்கொண்டாலும் நமக்கு பலன் கிடைப்பதில்லை.

கொசுக்களின் வரவால், டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, விஷக்காய்ச்சல், மர்மக்காய்ச்சல் உள்ளிட்டவற்றின் பிடியில் நாம் சிக்கித் தவிக்க நேரிடும்.
எனவே சில பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் மேற்கொள்வது, அவற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள உதவுகிறது.

How to escape from Mosquitos
Credit: Medical News Today

கொசுக்கள் தன்மை

மழைக்காலங்களில் கொசுக்கள் உற்பத்தியும் அதிகம். அவற்றின் தொல்லையும் அதிகம். அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் கொசுக்கள் மிகவும் படு சுறுசுறுப்பாகவே செயல்படும். அதிலும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, இந்த கொசுக்கள் குறிப்பாக மனிதர்களைக் குறிவைத்துத் தாக்கி, ரத்தத்தை உறிஞ்சுவிடும்.
கொசுக்கடியில் இருந்து தப்பிக்க சில வழிகள்.

சுற்றுப்புறத் தூய்மை

  • வீடு, வீட்டைச்சுற்றியுள்ள இடம் உள்ளிட்ட நம்முடைய சுற்றுப்புறத்தை, தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கொசுக்கள் அதிகளவில் தொல்லை கொடுக்கும். அந்த வேளைகளில் கொசுமருந்துகளை அதாவது மின்சாரத்தில் இயங்கும் கொசு விரட்டிகளைப் (Mosquitoe repellent) பயன்படுத்தலாம்.

  • அதே நேரத்தில் கொசு விரட்டிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எனவே கொசு விரட்டிகளுக்கு பதிலாக கொசுவலைகளைக் பயன்படுத்த தவற வேண்டாம்.

  • குழந்தைகளுக்கு கை மற்றும் கால்கள் முழுவதும் மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிவிப்பது, கொசுக்கடியில் இருந்து ஓரளவுக்கு பாதுகாக்கும். பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகளுக்கும் முழுக்கை அடைகளைக் போட்டு அனுப்பவும்.

  • பகல் வேளையில், டெங்கு காய்ச்சலைக் கொண்டுவரும் டெங்கு கொசுக்கள் அதிகளவில் கடிக்கும் என்பதால், மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

  • ஏர்கூலர்களை (Air Coolers)மண்ணெண்ணைய் கொண்டோ அல்லது கொசுவிரட்டி எண்ணெய் கொண்டோ சுத்தம் செய்வது அவசியம். அவற்றை காய வைப்பதை மறந்துவிட வேண்டாம்.

  • வீடுகளின் அருகிலோ, மேற்கூரையிலோ தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறம் அசுத்தமாக இருந்தால், மாநகராட்சியின் புகார் தெரிவித்து, அந்த இடத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுங்கள்.

  • மாலை நேரங்களில் பூங்காக்களுக்கு செல்வதைத் முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

  • அவ்வப்போது கொசு மருந்து அடித்து, கொசுக்களை ஒழிக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் செய்கிறார்களா? என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

Credit: Mortein

இயற்கையான வழிகள்

English Summary: Do you get caught up in chasing and biting? - Simple ways to escape! Published on: 28 July 2020, 07:23 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.