பொதுமக்கள் தங்களுடைய செல்போனில் வரும் எந்த லிங்க்-கையும் கிளிக் செய்யக்கூடாது என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுவித மோசடி
காலம் எவ்வளவுதான் டிஜிட்டல் மயமாக மாறினாலும், அதற்கு ஏற்றபடி, மோசடிகளும் நவீன விதமாக புதுப்புது உருவங்களில் பரவிவருகின்றன.எனவே பொதுமக்கள்தான் சற்று விழிப்புடன் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
ண்டும்.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பகுதி நேர வேலை (Part time work)
கடந்த சில நாட்களுக்கு பொதுமக்களின் செல்போன் எண்களுக்கு பிரபல நிறுவனங்களில் பகுதி நேர (Part Time) வேலை செய்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மோசடி நபர்களால் அனுப்பப்பட்டு வருகிறது.
அதில், வாட்ஸ்-அப் குரூப்பில் இணைவதற்கான ஒரு லிங்க்கும் அனுப்பப்படுகிறது. அதனை ‘கிளிக்’ செய்தவுடன் ஒரு ‘ஆப்’ (செயலி) பதிவேற்றம் ஆகிறது.
இந்த ஆப்பில் இருந்து ஒரு பொருளை வாங்கி விற்குமாறு கூறி, பண மோசடி நடக்கிறது. எனவே இந்த ‘ஆப்'களை (honey, making) பதிவேற்றம் செய்திருந்தாலோ அல்லது இதுபோன்ற வேறு பெயரில் உள்ள ஆப்களில் பணம் முதலீடு செய்திருந்தாலோ அதனை உடனடியாகக் கைவிட வேண்டும்.
கவனம் தேவை (Needs attention)
மேற்கொண்டு பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். இதுபோன்று பகுதி நேர வேலை என்று எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்-அப், டெலிகிராம் மூலம் அணுகும் மோசடி நபர்களிடம் கவனமாக இருக்க வே
கிளிக் கூடாது (Do not click)
பொதுமக்கள் தங்களுடைய செல்போனில் வரும் எந்தவித லிங்க்-கையும் கிளிக் செய்யக்கூடாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க...
தவறவிட்டத் தாலி- விவசாயியின் நேர்மையால் நடந்தது திருமணம்!
தினம் வெறும் ₹74 சேமிப்பு- கோடீஸ்வரராக ஓய்வு - அசத்தல் திட்டம்!