Health & Lifestyle

Saturday, 24 April 2021 06:55 PM , by: R. Balakrishnan

Credit : Agriwiki

கோடை காலத்தில் பதநீர் மற்றும் நுங்கு அதிக அளவில் கிடைக்கும். இரண்டுமே உடல் மற்றும் வயிற்றுப் பகுதியை குளிர்ச்சியாக்கும் என்பதால், சாலையோரங்களில் இதனை விற்பனை (Sales) செய்வதை பார்க்கலாம். மருத்துவ குணம் கொண்ட இந்த பதநீரால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்

பதநீரின் நன்மைகள்:

  • பதநீர் சர்க்கரை சத்து நிறைந்தது என்பதால் கோடையினால் ஏற்படும் சோர்வினை நீக்கும்.
  • உடலுக்கு குளிர்ச்சி தரும்.
  • கழிவு அகற்றியாகவும், வியர்வை அகற்றியாகவும் செயல்படும்.
  • இதனுடன் சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், உடம்புக்குத் தேவையான கால்சியம் (Calcium) கிடைக்கிறது.

Credit : Arivom Ayiram

  • எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்புத் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
  • ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஓர் அருமையான இயற்கை பானம்.
  • உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த டானிக் (Best Tonic).
  • வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும்.
  • பதநீரை, பழைய கஞ்சியுடன் சேர்த்து புளிக்க வைத்து, ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவி வந்தால் சீக்கிரம் குணமாகும்.

மேலும் படிக்க

பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் பல நன்மைகள்!

உலக பூமி தினம்! பிளாஷ்டிக்கை தவிர்த்து, நம் பூமியை மீட்டெடுப்போம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)