1. செய்திகள்

உலக பூமி தினம்! பிளாஷ்டிக்கை தவிர்த்து, நம் பூமியை மீட்டெடுப்போம்!

KJ Staff
KJ Staff
World Earth Day

Credit : Virakesari

பூமியானது மனிதர்கள் உட்பட பல கோடி உயிரினங்களின் உணவு, உறைவிடத்தை உறுதி செய்யும் பெரும் இயற்கை. மனிதன் பல தீமை செய்தும், அதைப் பொறுத்து மீண்டும் மீளும் வகையில் தான் பூமியும் கடவுளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியை மாசடையாமல் காப்பது நம் கடமை. அதில் முதலாவதாக நாம் செய்ய வேண்டியது பிளாஸ்டிக் (Plastic) குப்பைகளை, குப்பைத்தொட்டிகளில் போடுவது. இதை மட்டும் அனைவரும் செய்து விட்டால், நிச்சயம் பூமித்தாயின் மீது கரை படியாமல் பார்த்துக் கொள்ளலாம்.

உலக பூமி தினம்

சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பூமியை காக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப். 22ல் உலக பூமி தினம் (World Earth day) கொண்டாடப்படுகிறது. 'நம் பூமியை மீட்டெடுப்போம்' என்பதே இந்தாண்டின் கருப்பொருள். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் மாசுபாடு, மழையின்மை, பூமி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது. இது மனித வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

விவசாயம், கால்நடை வளர்ப்பு பாதிக்கும் அபாயமும் உள்ளது. இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட மனிதனால் வாழ முடியாது. இதை இன்றைய குழந்தைகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்கள் பூமியின் (Earth) எதிர்காலத்தை காப்பாற்றுபவர்கள். இயற்கையை நாம் நன்றாக கவனித்து கொண்டால் இயற்கையும் நம்மை சிறப்பாக கவனிக்கும்.

மனிதர்கள் நம் வசதிக்காக பூமிக்கு வளம் அளிக்கும் மரங்களை சாம்பலாக்குகிறோம். பாலிதீன் (Polythene) எனும் பெயரில் நீரை நிலத்திற்கு அடியில் செல்லவிடாமல் பூமித்தாயின் மூச்சை அடைக்கிறோம். பூமியின் இரத்தம் போல் உள்ள நீரை மாசுப்படுத்தி அதை நோயாளியாக மாற்றுகிறோம். இத்தனை செய்தும் பூமி இன்னும் நமக்கு மழையையும், சுத்தமான காற்றையும் முடிந்த அளவு தந்து கொண்டு தான் இருக்கிறது. இனியாவது நிலத்தையும், நீரையும் மாசடையாமல் பாதுகாப்போம் என்று அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். உலக பூமி தினமான இன்று, இயற்கையின் அதிசயங்களை நம் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லி, வருங்கால சந்ததிகள் நிம்மதியாக வாழ வழி வகுக்க வேண்டும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கோடையில் உடல் நலம் காக்கும் கீரைகள்! ஆர்வத்துடன் உழைக்கும் விவசாயிகள்

தேயிலை செடிகளை தாக்கும் சிவப்பு சிலந்தி நோய்! விவசாயிகள் கவலை!

English Summary: World Earth Day! Let's get rid of plastic and reclaim our planet!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.