அழகு என்றாலே அதில் உச்சி முதல் பாதம் வரை அடங்கும். அந்த வகையில் எப்போதுமே சருமம், கூந்தல் மற்றும் கை, கால்களைப் பராமரிப்பதில் சில பெண்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். அவர்கள் குறிப்பாக முகத்திற்கும், கூந்தலுக்கும் கொடுக்கின்ற முக்கியத்தும் அதிகம். அதேநேரத்தில், பாத பராமரிப்பு என்பதை எப்போதாவது செய்துகொள்கிறார்கள்.
ஆனால் தற்போது நாடு முழுவதும், தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தொடர்ந்து மழையில் நனைவதால், பாதங்கள் சுருங்கி, ஒரு வித நாற்றம் எடுக்கத் தொடங்குகின்றன.
மழையால் வரும் இந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க நினைப்பவரா நீங்கள்? பியூட் பர்லர் (Beauty parlour) போகாமல், உங்கள் பாதங்களை நறுமணம் நிறைந்தவையாக மாற்றிக்கொள்ள வேண்டுமா?
இதோ சில எளிய செய்முறைகள். இதனை நீங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
ரோஜா இதழ் சிகிச்சை (Rose petal soak)
சற்று வாய் அகலமான டப்பில்(Tub) ரோஜா இதழ்களைப் போட்டு தண்ணீரைக் கொண்டு ஊற வைக்கவும். அத்துடன் நறுக்கிய எலுமிச்சப்பழங்கள் மற்றும் எப்சம் சோடாவைப் போடவும். சிறிது ரோஸ் ஆயில் சேர்த்துக் கலக்கி விடவும். இதில், சுமார் 20 நிமிடங்கள் கால்களை ஊற வைக்கவும். பிறகு கால்களை கழுவினால், ரோஜா மணம் மணக்கும் பாதங்களைப் பெறுவீர்கள்.
வினிகர் (Vinegar)
முதலில் பாதங்களை சுத்தமான தண்ணீரில் கழுவி, துணியைக் கொண்டு நன்கு துடைத்து காயவைக்கவும். பிறகு அகலமான வாளியில் அல்லது பாதங்களை வைக்கும் டப்பில்(Tub) ஓரளவுக்கு சூடாக்கிய தண்ணீரை ஊற்றி அதனுடன் வினிகரைச் சேர்க்கவும். இதில் சுமார் 20 நிமிடங்களை கால்களை ஊறவைத்தால், வினிகர் பாதத்தில் உள்ள நாற்றத்தை எடுப்பதுடன், நோய் பரவுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.
தேயிலை மர எண்ணெய் (Tea Tree Oil)
வாய் அகலமான வாளியில், தண்ணீர் ஊற்றி அதில், சிறிதளவு தேயிலை மர எண்ணெயைச் சேர்க்கவும். பிறகு சிறிது நேரம், இந்த வாளியில் பாதங்களை வைத்து ஊற வைக்கவேண்டும். இதன் மூலம் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் பாதிப்பில் இருந்து தேயிலை மர எண்ணெய், பாதுகாக்கிறது. மேலும் பாதத்தில் இருந்து வெளியேறி நாற்றமும் முற்றிலும் மறைந்துவிடும்.
ஷாம்பு (Shampoo)
ஒரு அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஷாம்பு சேர்த்து கலந்து, பின் அதனுள் கால்களை 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர், பிரஷ் கொண்டு கால்களைத் தேய்த்து வெளியே எடுத்து, துணியால் துடைக்கவும்.
எலுமிச்சைச் சாறு (Lemon)
அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை பாதியாக நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழியவும். எலுமிச்சைத் தோலை நீரிலேயே போட்டுவிடவும். அதில் கால்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சைத் தோலைக் கொண்டு தேய்க்க வேண்டும். பிறகு பியூமிக் கல் பயன்படுத்தி, குதிகால்களை நன்கு தேய்த்து விட்டு, கால்களை வெளியே எடுத்து துணியால் துடைக்க வேண்டும்.
காபி பொடி (coffee powder)
ஒரு பௌலில் 2 டீஸ்பூன் காபி பொடி, 2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை கால்களில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு கையால் கால்களை சிறிது நேரம் தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
இறுதியில் கெட்டியான ஏதேனும் ஒரு மாய்ஸ்சுரைசரை கால்களில் தடவி, மென்மையாக 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
இந்த முறையில் மாதம் இருமுறை பெடிக்யூர் செய்து வந்தால் கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி உங்கள் பாதம் அழகாக காட்சியளிக்கும். நாற்றத்திற்கும் கெட்-அவுட் (Get- out) சொல்லிவிடலாம்.
மேலும் படிக்க:
Hair Care: தேங்காய், தேன்.. உபயோகித்து கூந்தலுக்கான ஹேர் மாஸ்க் !
இனி தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி, இந்நாளாகவும் கொண்டாடப்படும்!