1. மற்றவை

இனி தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி, இந்நாளாகவும் கொண்டாடப்படும்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
April 14th will now celebrated in Tamil Nadu as this day too!

தமிழ் புத்தாண்டும், அம்பேத்கர் ஜெயந்தியுமான ஏப்ரல் 14 ஆம் தேதி, இனி வரும் நாட்களில் சமத்துவ தினமாகவும் கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இனி, தமிழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல்-14ஆம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் துறைவாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பேரவைத் தலைவர் அவர்களே! அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சமத்துவச் சூரியன். பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன். சமூகம் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வை சட்டம், கல்வி, அரசியல் எழுச்சி மூலமாகச் சமப்படுத்தப் போராடிய போராளி அவர்.

"இருட்டறையில் இருக்குதடா உலகம் - சாதி இருக்கிறதென்போனும் இருக்கின்றானே' என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடைய வரிகளைப்போல சாதிக் கொடுமையால் இருண்ட உலகத்தைத் தன்னுடைய பரந்த அறிவால், ஞானத்தால் விடிய வைத்த விடிவெள்ளி அண்ணல் அம்பேத்கர் ஆவார். அவர் வேண்டாததை நீக்கிய சிற்பி, வேண்டியதை சேர்த்த ஓவியர்".

அண்ணல் அறிவுச்சுடராய் விளங்கி அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துக்கொடுத்திருக்கிறார். அவருடைய கருத்துக்கள் ஆழமும், விரிவும் கொண்டவையாகும். எதிர்காலத்துக்கு ஒளிவிளக்காக திகழ்ந்திருக்கிறார். நேற்று மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைப்பெற்றது. அந்தக் கூட்டத்தில் பெரியார் பிறந்தநாளை 'சமூகநீதி நாளாக' அறிவித்தது போல் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை 'சமத்துவ நாள்' என்று கொண்டாடபட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைப்பதாக தெரிவித்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 14ஆம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்றும், சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அண்ணலுடைய முழு அளவு வெண்கலச்சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் முன்வைத்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த இந்தக் கோரிக்கையையும் ஏற்று அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழுஉருவ வெண்கலச்சிலை நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பெரியாருடைய நூல்களை 21 மொழிகளில் மொழிபெயர்த்ததைப் பாராட்டியதோடு, அண்ணல் அம்பேத்கருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை தமிழில் வாசிக்க வாய்ப்பாக மொழிபெயர்த்து புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார். அந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழக அரசால் அண்ணலுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம் பதிப்பாக தமிழில் வெளியிடப்படும் என்பதும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

சமூகநீதியின் நோக்கம் சமத்துவத்தை அடைவதே என்பதையும், இவ்விரண்டும் நம் இலக்கின் இரண்டு கண்கள் என்பதையு, இந்த மாமன்றம் மட்டுமல்ல, இந்தியாவே அறியும் என்பதும் சட்டசபையில் குறிப்பிடப்பட்டது.

மேலும் படிக்க:

தொடர் விடுமுறை முன்னிட்டு 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Hair Care: தேங்காய், தேன்.. உபயோகித்து கூந்தலுக்கான ஹேர் மாஸ்க் !

English Summary: April 14th will now celebrated in Tamil Nadu as this day too! Published on: 13 April 2022, 04:09 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.