Health & Lifestyle

Saturday, 07 May 2022 07:58 AM , by: Elavarse Sivakumar

காய்கறி பொரியல் என்று நினைக்கும்போதே நம்மில் பலரது நாக்கில் ருசிப்பது உருளைக்கிழங்கு. ஏனெனில், உருளைக்கிழங்கு வறுவல், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான டிஷ்.
அதனால்தான் உருளைக்கிழங்கு காய்கறிகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.

இதனை எந்தக் காய்கறிகளுடனும் சேர்த்து சமைக்கலாம். பெரும்பாலான மக்கள் இதை அதிகமாக உட்கொள்வதற்கு இதுவே காரணம். ஆனால் அதை அதிகமாக உட்கொள்வதால் பல தீமைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே அதிகளவில் உருளைக்கிழங்கை உட்கொண்டால் என்ன தீமைகள் ஏற்படும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

ஒவ்வாமை (Allergy)

நீங்கள் உருளைக்கிழங்கை அதிக அளவில் உட்கொண்டால், கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் திடீர் ஒவ்வாமை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

வாதம் (Rheumatism)

உருளைக்கிழங்கில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் கீல்வாதத்தின் வலியை அதிகரிக்கச் செய்யும். எனவே கீல்வாத நோயாளிகள் உருளைக்கிழங்கை அதிகம் உட்கொள்ளக்கூடாது.

சர்க்கரை (diabetics)

நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். அதாவது, இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க, நீங்கள் உருளைக்கிழங்கை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

ரத்த அழுத்தம் (Blood pressure)

உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும் . அதாவது, பிபி நோயாளிகள் உருளைக்கிழங்கை அதிகம் உட்கொள்ளக்கூடாது.

எடை அதிகரிக்கும்

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது, இதன் காரணமாக அதிகப்படியான அளவு கலோரிகளை அதிகரிக்கும், இது உடல் பருமனை ஏற்படுத்தும். தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், உருளைக்கிழங்கைத் தவிர்ப்பதே சிறந்தது.

மேலும் படிக்க...

டீக்கடைகளில் நீங்கள் அருந்தும் தேநீர் தரமானதா? கண்டுபிடிப்பது எப்படி?

ரத்தத்தில் சர்க்கரைக் கட்டுப்படுப்படுத்தும் வெண்டைக்காய் வாட்டர்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)