இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 July, 2023 7:20 PM IST

பொதுவாக உணவாக உட்கொள்ளப்படும் வேளையில், முடி பராமரிப்புக்காக வெண்டைக்காயினை பலர் நேரடியாகப் பயன்படுத்தி வருகின்றனர். முடி ஆரோக்கியத்திற்கு வெண்டைக்காய் தரும் சில நன்மைகளை இங்கு காணலாம்.

ஊட்டச்சத்து நன்மைகள்:  வெண்டைக்காயில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஆக்ஸிஜனேற்றி தன்மைகள் உள்ளன. மேலும் இரும்பு மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

வெண்டைக்காய் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உள்ளடக்கிய ஒரு சமச்சீர் உணவு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மேலும் மறைமுகமாக முடிக்கு பயனளிக்கும்.

உச்சந்தலை ஆரோக்கியம்:

வெண்டைக்காய் கலந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவுவது வறட்சியைத் தணித்து ஆரோக்கியமான உச்சந்தலையை மேம்படுத்த உதவும் என்று சிலர் நம்புகிறார்கள். இருப்பினும், இந்த கூற்றை ஆதரிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. ஆனால் சிலர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி நல்ல முடிவை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஹேர் கண்டிஷனிங்:

வெண்டைக்காயில் மியூசிலேஜ் எனப்படும் இயற்கையான பொருள் உள்ளது.  சில தனிநபர்கள் இந்த மெலிதான பொருளை இயற்கையான ஹேர் கண்டிஷனராக பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயினை வேகவைத்து, குளிர்விக்கும் போது கிடைக்கும் மெலிதான திரவத்தை கொண்டு முடியை அலசினால் நல்ல பலனை தருவதாகவும் நம்பப்படுகிறது. இதனால் முடி மென்மையாகவும், பளபளப்பாகவும் தோன்றும்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்களில் வெண்டையினை ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம். வீட்டில் தயாரித்துள்ள ஹேர் மாஸ்கினை உச்சந்தலையில் தடவி, சிறிது நேரம் விட்டுவிட்டு, பின்னர் தலைமுடியினை நன்கு அலசினால் ஈரப்பதத்தைத் தக்கவைத்து ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

முடி வளர்ச்சி:

வெண்டைக்காயானது சில நேரங்களில் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு தொடர்புடையது. இந்தக் கூற்றை நிருபீக்க நேரடியான ஆதாரம் இல்லை என்றாலும், அதன் ஊட்டச்சத்து உள்ளடக்கம் மறைமுகமாக ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு பங்களிக்கும் என கூறப்படுகிறது.

ஸ்கால்ப்: (Scalp Moisturizer)

வெண்டைக்காய் பேஸ்ட் அல்லது சாறு கலவையை உச்சந்தலையில் தடவுவது உலர்ந்த உச்சந்தலையை ஈரப்பதமாக்க உதவும் என்று சிலர் நம்புகிறார்கள். வெண்டைக்காயில் உள்ள பசை நீரேற்றத்தை வழங்குவதாகவும், உச்சந்தலையில் வறட்சியைப் போக்குவதாகவும் கருதப்படுகிறது. மேலும் அரிப்பு போன்றவற்றுக்கும் தீர்வளிப்பதாக நம்பப்படுகிறது.

முடியின் ஆரோக்கியத்திற்கு வெண்டை சில நன்மைகள் அளிப்பதாக அறிவியல் ஆய்வுகள் குறைவாகவே உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரின் உடல்நிலையும் வேறுபட்ட வகையில் இருக்கும் நிலையில் வெண்டையினை உச்சந்தலையில் பயன்படுத்துவதற்கு முன் உங்களது மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெறவும். உங்களது தலைமுடி, ஸ்கால்ப் தன்மை குறித்து ஒரு புரிதலை பெறுவதற்கு தகுதியான ட்ரைக்காலஜிஸ்ட்டையோ அணுகுவது நல்லது.

மேலும் காண்க:

கர்ப்பமாக இருக்கும் போது இதெல்லாம் உண்ணாதீங்க- வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்

English Summary: potential uses of ladyfinger in hair care
Published on: 17 July 2023, 07:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now