கொரோனாத் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் அதிரடி முயற்சியாகத் தளர்வில்லா முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் ஒரு வாரத்திற்கு எந்த தளர்வும் இல்லாமல் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொலைகாரக் கொரோனா (The killer corona)
கொரோனாத் தொற்று அதிகரிக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் திகழ்கிறது. இதையடுத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த, மே 10ம் தேதி அதிகாலை 4:00 மணி முதல் 24ம் தேதி அதிகாலை 4:00 மணி வரை, மாநிலம் முழுதும் சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
முதல்வர் அறிவிப்பு (Chief Announced)
அதன்பின், மே 15 முதல் 24ம் தேதி அதி காலை 4:00 மணி வரை, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவை முடிவடைந்த நிலையில், நோய் பரவலைத் தடுக்க ஏதுவாக, தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்த, மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்தனர். எம்.எல்.ஏ.,க்கள் குழு கூட்டத்திலும், முழு ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஊரடங்கை நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அமலுக்கு வந்தது தளர்வில்லா ஊரடங்கு (The relaxed curfew came into effect)
இதன்படி தளர்வில்லா ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ளது. எனவே ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்வித தளர்வுகளுமின்றி தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மட்டுமே அனுமதி (Only allowed for this)
-
மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள்
-
தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரியவேண்டும்.
-
மின்னணு சேவை, காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை இயங்கலாம்
-
ஸ்விக்கி, சொமேட்டோ' போன்ற உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள், அந்த நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்.
-
வேளாண் விளைபொருட்கள் மற்றும் இடுபொருட்களை எடுத்து செல்லலாம்
-
சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்லவும் அனுமதி அளிக்கப்படும்.
-
செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கலாம்.
-
தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.
தாமதமான அறிவிப்பு (Late notice)
இந்த முழுஊரடங்கிற்கு முன்னேற்பாடாக இரண்டு நாள் தளர்வுகளை அரசு அளித்தாலும், ஒருநாள் பயனற்று போனது. மீதி இருக்கும் ஒருநாளில் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. முழு ஊரடங்கை அமல்படுத்தத் திட்டமிட்ட அரசு, மக்கள் கடைகளுக்குக் கூட்டம் கூட்டமாகச் செல்வதை தவிர்க்க 3 நாள்கள் முன்பாகவே தளர்வை அறிவித்திருக்கலாம்.
தவிர்த்திருக்கலாம் (Could have been avoided)
அந்த நாட்களில் காலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை கடைகள் திறக்க அனுமதித்திருந்தால் பொதுமக்களும் நிதானமாக பொருட்களை வாங்கி இருப்பார்கள். அதே போல் வெளியூர் செல்பவர்களும் பேருந்தில் செல்ல முண்டியடித்து சென்றிருக்க மாட்டார்கள்.
7 நாட்களில் தளர்வுகள்
-
பால் விநியோகம், குடிநீர், தினசரி பத்திரிகை, மருந்தகம், மருத்துவமனை
-
தோட்டக்கலைத்துறை மூலம் சென்னையிலும், மற்ற பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுடனும் இணைந்து வாகனம் மூலம் காய்கறி, பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும்.
-
தலைமைச் செயலகம், மாவட்டங்களில் அத்தியாவசிய அரசு துறை மட்டும் செயல்படும்.
-
உணவகங்களில் பார்சல் மட்டுமே. உணவு விநியோகம் காலை 6 முதல் 10 மணி வரை.
-
மதியம் 12 மணி முதல் 3 மணி வரை. மாலை 6 மணி முதல் 9 மணி வரை
டீசல், பெட்ரோல் பங்க், ஏ.டி.எம் செயல்படும்.
-
மருத்துவக் காரணம், இறப்புக்கு மட்டும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதி
-
மருத்துவக்காரணங்களுக்கு மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பதிவுத் தேவையில்லை.
சாலைகள் வெறிச்சோடின (The roads were deserted)
தளர்வில்லா ஊரடங்கு காரணமாக சாலைகள் வாகனங்கள் சத்தமின்றி வெறிச்சோடின. ஆங்காங்கே போலீசாரின் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
மேலும் படிக்க...
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு! முதல்வர் அறிவிப்பு!
தென்னை விவசாயத்தைச் சேர்ந்த 10,000 பேர் வேலையிழப்பு!
ஊரடங்கில் வேளாண் இடுபொருட்கள் தடையின்றி கிடைக்க வழிவகை! அதிகாரி தகவல்